சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமிக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது..
மின் கட்டணம், சொத்து வரி உயர்வை கண்டித்து இன்று அதிமுக சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மூத்த நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.. இதில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.. ஸ்டாலின் திமுகவை அழிக்க பார்க்கிறார் என்று குற்றம்சாட்டிய அவர், கருணாநிதியால் அதிமுகவை அழிக்க முடியவில்லை.. ஸ்டாலினால் முடியுமா..? என்று தெரிவித்தார்.. மேலும் பேசிய அவர் “ கொரோனாவால் மக்கள் சிரமங்களை சந்தித்து வரும் நிலையில், ஈவு இரக்கமில்லாமல் மின் கட்டணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் உயர்த்தி உள்ளார்.. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு பேச்சு.. ஆட்சிக்கு வந்த பின் ஒரு பேச்சு.. இது தான் திராவிட மாடல்..” என்று தெரிவித்தார்..
இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் வெயில் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது.. இதையடுத்து அருகில் இருந்தவர்கள், அவருக்கு தண்ணீர் கொடுத்து மேடையிலேயே அமர வைத்தனர்.. எடப்பாடி பழனிசாமி தற்போது நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது.. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் எடப்பாடி பழனிசாமி பேசிய நிலையில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது..
இதையடுத்து மின் கட்டண உயர்வுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி கண்டனத்தை தெரிவித்தனர்.. ஆர்ப்பாட்டம் முடிவடைந்ததை அடுத்து எடப்பாடி பழனிசாமி தனது வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்..