fbpx

தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கடிதம்.! மேலும் 3 வார காலம் அவகாசம் தர கோரிக்கை..!

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், மேலும் 3 வார காலம் கூடுதல் அவகாசம் கோரி தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம், ஜெயலலிதாவின் உறவினர்கள், பாதுகாவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அதிகாரிகள் உட்பட 150-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது. அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பாக தொடரப்பட்ட வழக்கில் ஆணையத்தில் நடைபெறும் விசாரணை என்பது எய்ம்ஸ் மருத்துவக் குழுவும் இடம்பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. தீர்ப்பின்படி கடந்த 2 மாதங்களாக நடைபெற்ற விசாரணையின் போது, எய்ம்ஸ் மருத்துவ குழு காணொலி காட்சி மூலமாக பங்கேற்றது. அவ்வாறு பங்கேற்றிருந்த எய்ம்ஸ் மருத்துவக் குழு தன்னுடைய அறிக்கையை தாக்கல் செய்வதற்கு ஆறுமுகசாமி ஆணையத்திடம் அவகாசம் கோரியுள்ளது.

தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கடிதம்.! மேலும் 3 வார காலம் அவகாசம் தர கோரிக்கை..!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக முழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய எய்ம்ஸ் மருத்துவ குழுவின் அறிக்கையும் அவசியம் என்பதால், அதனை பெற்ற பிறகு தமிழக அரசிடம் அறிக்கையை தாக்கல் செய்ய ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கிடையே, ஆணையத்திற்கு 13-வது முறை வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், மேலும் 3 வார காலம் அவகாசம் கோரி தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அரசு வழங்க உள்ள 3 வார கால அவகாசத்தில் எய்ம்ஸ் மருத்துவக்குழு அறிக்கையை பெற்று, ஜெயலலிதா மரணம் தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய ஆணையம் முடிவு செய்துள்ளது.

Chella

Next Post

’குரங்கம்மை நோய்க்கு இந்தியாவில் தடுப்பூசி தயாரிப்பு’..! மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்..!

Tue Aug 2 , 2022
குரங்கம்மைக்கு இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். குரங்கம்மை நோய் தொடர்பாக மாநிலங்களவையில் இன்று விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ”குரங்கம்மை குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. மத்திய-மாநில அரசுகள் இணைந்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குரங்கு அம்மைக்கு எதிராக சரியான தடுப்பூசியைக் கண்டறிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நமது விஞ்ஞானிகள் குரங்கு அம்மை வைரஸை […]
மீண்டும் தீயாய் பரவும் குரங்கு அம்மை..!! சர்வதேச சுகாதார அவசரநிலை அறிவிப்பு..!!

You May Like