வேலூரில் தந்தையே தனது 13 வயது பெண் குழந்தையை கர்ப்பமாகி குழந்தை பெற்றெடுக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. மேலும் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் மாநகராட்சி விருபாட்சிபுரம் பகுதியில் வசித்து வரும் கூலி தொழிலாளி சங்கர் (45). இவருடைய மனைவி இவரை விட்டு பிரிந்து வேறு ஒருவருடன் சென்று விட்டதால், தனது 15 வயது மகன் மற்றும் 13 வயது மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவரது அவரது 13 வயது மகளை அவரே பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமாகியுள்ளார்.
இதற்கிடையில் சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால், அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிறுமையை சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 13 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளதால், மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், வேலூர் சமூகநலத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதை தொடர்ந்து வேலூர் மாவட்ட சமூக நலத்துறையினர்
விசாரணை செய்தனர்.
விசாரணையில் அந்த சிறுமியின் கர்ப்பத்திற்கு அவரின் தந்தை தான் காரணம் என அவர்களுக் தெரிய வந்துள்ளது. இதை அடுத்து வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், அளித்த புகாரின் பேரில், சங்கரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். தந்தையே மகளை கர்ப்பமாக்கி, குழந்தை பிறந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.