fbpx

காமன்வெல்த் கிரிக்கெட்..! 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி..!

காமன்வெல்த் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்தில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல்முறையாக கிரிக்கெட் விளையாட்டுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. அரையிறுதிக்கும் இந்தியா தகுதி பெற்றது. அதன்படி, இந்தியா, ஆஸ்திரேலியா, பார்படாஸ், பாகிஸ்தான், நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. மகளிர் கிரிக்கெட் அணிகள் மட்டும் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளன. முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணியிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் தோல்வியைத் தழுவியது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் மகளிர் அணியை கடந்த 31ஆம் தேதி எதிர்கொண்டது. அதில், இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், குரூப் ஏ பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் இந்தியாவும், பார்படாஸும் மோதின.

காமன்வெல்த் கிரிக்கெட்..! 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி..!

இதில், பார்படாஸ் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் விளையாடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. ராட்ரிக்ஸ் 56 ரன்களும், ஷஃபாலி வர்மா 43 ரன்களும் எடுத்து அசத்தினார். தீப்தி ஷர்மா 34 ரன்கள் எடுத்தார். பின்னர், 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பார்படாஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் அனைத்து வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணியின் சார்பில் ரேணுகா சிங் 4 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது இந்திய அணிக்கு 2ஆவது வெற்றியாகும்.

Chella

Next Post

கேஆர்பி அணையிலிருந்து நீர்திறப்பு.! ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

Thu Aug 4 , 2022
கே.ஆர்.பி. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி. அணையில் இருந்து வினாடிக்கு 2,800 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, தென்பெண்ணை ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்று நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 51 அடிக்கு […]
கேஆர்பி அணையிலிருந்து நீர்திறப்பு.! ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

You May Like