விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ள நிலையில் டெல்லியில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது….
வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கம், விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து காங்கிரஸ் இன்று நாடு தழுவிய போராட்டம் நடத்தவுள்ளது. இதனையடுத்து டெல்லியில் உள்ள அக்பர் சாலை மற்றும் பிற இடங்களில் தடுப்புகள் போடப்பட்டுள்ளன, மேலும் கட்சி அலுவலகம் அருகே தொழிலாளர்கள் வரத் தொடங்கியதால் வெவ்வேறு இடங்களில் போலீசார் உள்ளனர். மேலும், ஜந்தர் மந்தர் தவிர டெல்லியின் முழுப் பகுதியிலும் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (ஏஐசிசி) பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலுக்கு எழுதிய கடிதத்தில், ஆகஸ்ட் 05 ஆம் தேதி புது டெல்லி முழுவதும் சிஆர்பிசியின் 144 வது பிரிவு விதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது, இதையடுத்து, தலைநகர் டெல்லியில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்..
இதனிடையே டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் அக்கட்சி தொண்டர்கள் குவிந்துள்ளனர்.. இந்த போராடத்தின் ஒருபகுதியாக குடியரசு தலைவர் மாளிகை முதல், பிரதமரின் இல்லமான கெராவுக்கும் பேரணி நடத்தப்படும். இது தொடர்பாக, போராட்டத்திற்கான வியூகம் வகுக்க, கட்சித் தலைவர்கள் கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விலை உயர்வு மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது..