செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி பங்கேற்கிறார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இனிவரும் ஒவ்வொரு போட்டியும் பதக்க வாய்ப்பை உறுதி செய்யும் என்பதால், வீரர்-வீராங்கனைகள் கவனமாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு தேவையான வசதிகளை தமிழக அரசு முன்னின்று செய்து வருகிறது. அதேபோல் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான நிறைவு விழாவிலும் தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது. தொடக்க விழாவைப் போல் நிறைவு விழாவையும் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி பங்கேற்கிறார். இறுதி நாள் ஆட்டம் வரும் 9ஆம் தேதி செவ்வாய்கிழமை நடைபெறுகிறது. போட்டியின் நிறைவு விழாவை பிரமாண்டமாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில், வரும் 9ஆம் தேதி மாலை 6 மணிக்கு நேரு உள்விளையாட்டு நடைபெறும் நிறைவு விழாவில், மகேந்திர சிங் தோனி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க உள்ளார்.