fbpx

“ அரசியல் பற்றி பேசினோம்.. ஆனால் அதைப்பற்றி சொல்ல முடியாது..” ஆளுநரை சந்தித்த பின் ரஜினிகாந்த் பேட்டி..

சென்னையில் கிண்டியில் உள்ள ராஜ் பவனில் நடிகர் ரஜினிகாந்த், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துள்ளார்.. தமிழக ஆளுநராக ரவி பொறுப்பேற்ற பிறகு நடிகர் ரஜினிகாந்த் அவரை சந்திப்பது இதுவே முதன்முறையாகும்.. இது மரியாதை நிமித்தமன சந்திப்பு என ஆளுநர் மாளிகை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.. சுமார் 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது..

இந்த சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களை ரஜினிகாந்த் சந்தித்து பேசினார்.. அப்போது “ இது மரியாதை நிமித்தமான ஒரு சந்திப்பு… தமிழ் மக்களின் நேர்மை, கடின உழைப்பு , ஆன்மீக உணர்வு அவருக்கு மிகவும் ஈர்த்துள்ளது.. தமிழ்நாட்டின் நலனுக்கு எதை செய்ய வேண்டுமானாலும் தயாராக உள்ளதாக ஆளுநர் என்னிடம் தெரிவித்தார்..” என்று கூறினார்.. பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, கருத்து தெரிவிக்க ரஜினி மறுத்துவிட்டார்..

அரசியல் குறித்து ஆளுநரிடம் விவாதித்தாகவும், அதை தற்போது பகிர்ந்து கொள்ள முடியாது என்றும் கூறினார்.. மீண்டும் அரசியலுக்கு வரும் திட்டம் உள்ளதாக என்ற கேள்விக்கு, அப்படி எந்த திட்டமும் இல்லை என்று ரஜினி பதில் கூறினார்.. மேலும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேசினீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்.. அதைப்பற்றி எல்லாம் தெரிவிக்க முடியாது என்று கூறிவிட்டார்..

Maha

Next Post

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில்.. மின்சார சட்டதிருத்த மசோதா மக்களவையில் தாக்கல்..

Mon Aug 8 , 2022
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் மின்சார சட்டதிருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.. எனினும் விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றை கண்டித்து எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால், மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் முடங்கி வருகின்றன.. இந்நிலையில் இன்று மின்சாரத் திருத்த மசோதா அல்லது எரிசக்தி பாதுகாப்பு (திருத்தம்) மசோதா, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.. மின்சார விநியோகத் […]

You May Like