fbpx

பள்ளி மாணவி மரண விவகாரம்..! விடுதி மாணவிகள் டிசி பெற்று சொந்த ஊருக்கே திரும்பியதால் பரபரப்பு..!

கீழச்சேரி பள்ளி மாணவி மரண விவகாரத்தில், விடுதியில் தங்கியிருந்த 23 மாணவிகள், ஒரே நாளில் மாற்றுச்சான்றிதழ் பெற்று சொந்த ஊர் திரும்பினர்.

திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த 12ஆம் வகுப்பு மாணவி, கடந்த மாதம் 25ஆம் தேதி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார் அளித்ததை அடுத்து, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், விடுதிக் காப்பாளர்களை தொடர்ந்து, மாணவிகளிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

மாணவி மரண விவகாரம்..! விடுதி மாணவிகள் டிசி பெற்று சொந்த ஊருக்கே திரும்பியதால் பரபரப்பு..!

இந்நிலையில், மாணவியுடன் விடுதியில் தங்கி படித்த 23 மாணவிகள், பள்ளியில் இருந்து மாற்றுச் சான்றிதழ் வாங்கி சொந்த ஊருக்கு சென்றனர். பெற்றோர் சம்மதத்துடனே மாற்றுச்சான்றிதழ் மாவட்ட கல்வித்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், மாணவிகளிடம் உள்ள அச்சத்தை போக்கும் வகையில், மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்.. கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் அரசு அதிரடி உத்தரவு..

Thu Aug 11 , 2022
பொது இடங்களில் மாஸ்க் அணியாத்வர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என்று டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.. நாள் ஒன்றுக்கு சராசரியாக 15000-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகி வருகிறது.. எனவே கொரொனா பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு மாநிலங்களை அறிவுறுத்தி உள்ளது.. இந்நிலையில் டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், பொது இடங்களில் மாஸ்க் […]

You May Like