மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் கார் மீது காலணி வீசப்பட்டது..
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த லக்ஷ்மணன் வீரமரணம் அடைந்தார்.. லக்ஷ்மணனின் சொந்த ஊரான மதுரைக்கு அவரின் உடல் இன்று கொண்டு வரப்பட்டது.. இந்நிலையில் லக்ஷ்மணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மதுரை விமான நிலையத்திற்கு சென்றார்.. லக்ஷ்மணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு அவர் திரும்பிய போது, அங்கிருந்த பாஜகவினர் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் காரை நிறுத்தி காலணியை வீசினர்..
லக்ஷ்மணின் உடலுக்கு அரசின் சார்பாக அமைச்சர் அஞ்சலி செலுத்திய பிறகே, பாஜகவினருக்கு அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது.. இதனால் பாஜகவினருக்கும் அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், இந்த பிரச்சனை காரணமாக அமைச்சர் கார் மீது காலணி வீசப்பட்டதாக கூறப்படுகிறது.. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது..