வாட்ஸ்அப் குரூப்களில் குரூப் அட்மின்களே மெசேஜ்களை ‘Delete for Everyone’ செய்யலாம் எனும் புதிய வசதி அறிமுகம் செய்துள்ளது.
ஒருவர் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் வாட்ஸ்-அப் செயலி மூலம் ஒருவரை எளிதில் தொடர்புகொள்ளலாம் என்பதாலேயே, உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. வாட்ஸ்அப், பிற செயலிகளைப் போன்று இல்லாமல், இளைஞர்களுக்கு மட்டுமின்றி அனைத்து வயதினரும் பயன்படுத்தும் வகையில் உள்ளது.
உலக அளவில் கோடிக்கணக்கான பயனாளர்களை வைத்திருக்கும் வாட்ஸ்அப் கடந்த 2009-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்நிலையில் அந்த செயலில் பல்வேறு புதிய புதிய அப்டேட்களை கொடுத்து வருகிறது தகவல் பரிமாற்றத்தில் வாட்ஸ்அப் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அந்தவகையில் அந்த நிறுவனம் தற்பொழுது இன்னுமொரு புதிய அப்டேட்களை கொடுப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. புதிய அப்டேட்கள் எதுவாக இருந்தாலும் முதலில் சோதனை முறையில் கொண்டு வரப்பட்டு பின்னர் பயனர்களிடையே வரவேற்பு இருந்தால் அதனை நடைமுறைப்படுத்துகிறது வாட்ஸ் அப்.
அந்த வகையில், இனி வாட்ஸ்அப் குரூப்களில் குரூப் அட்மின்களே மெசேஜ்களை ‘Delete for Everyone’ செய்யலாம் எனும் புதிய வசதி அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியின் மூலம், வாட்ஸ்அப் குரூப் அட்மினே அந்த குரூப்பில் யாரேனும் தவறான, இழிவுபடுத்தும் நோக்கத்தில் மெசேஜ் செய்தால் அதை ’Delete For Everyone’ ஐத் தேர்வு செய்து குரூப்பை விட்டு அதனை நீக்கிவிடலாம். குறிப்பிட்ட அட்மினால் நீக்கப்பட்டது என்பதும் அதில் குறிப்பிடப்படும்.