fbpx

கள்ளக்காதலை கைவிட மறுத்த மனைவி..! கழுத்தை அறுத்துக் கொன்ற கணவன்..! பரபரப்பு

கள்ளக்காதலனை கைவிட மறுத்த மனைவியை கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் அருகே எலவம்பட்டி ஜீவானந்தம் நகரை சேர்ந்தவரை சங்கர். இவரது மகள் அருள்மொழி (28). இவருக்கும் ஆந்திர மாநிலம் குப்பம், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் (32) என்பவருக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. வேல்முருகன் பாணிபுரி வியாபாரம் பார்த்து வருகிறார். வேல்முருகனுக்கும் அருள்மொழிக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. இந்த சமயத்தில், அருள்மொழிக்கும் சொரக்காயல்நத்தம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த கணவர் வேல்முருகன் மனைவியை கண்டித்து கள்ளக்காதலை கைவிடக் கூறியுள்ளார். ஆனால், அருள்மொழி இதனை மறுத்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு கள்ளக்காதலனுடன் தலைமறைவானார்.

கள்ளக்காதலை கைவிட மறுத்த மனைவி..! கழுத்தை அறுத்துக் கொன்ற கணவன்..! பரபரப்பு

இதுகுறித்து கணவர் வேல்முருகன் குப்பம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார், புதுச்சேரியில் பதுங்கியிருந்த அருள்மொழியையும் அவரது கள்ளக்காதலனையும் பிடித்தனர். பிறகு அறிவுரை கூறி அருள்மொழியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். அதனைத்தொடர்ந்து அருள்மொழி கடந்த 3 நாட்களாக தனது பெற்றோர் வீட்டில் இருந்துள்ளார். அப்போது கணவர் வேல்முருகன் மனைவியின் வீட்டிற்கு வந்து 2 நாளாக தங்கியுள்ளார். இந்நிலையில், நேற்றைய தினம் அருள்மொழியின் பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், அருள்மொழி-கணவர் வேல்முருகன் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

கள்ளக்காதலை கைவிட மறுத்த மனைவி..! கழுத்தை அறுத்துக் கொன்ற கணவன்..! பரபரப்பு

அப்போது, மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவி அருள்மொழியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், அருள்மொழியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, மனைவியை கொலை செய்துவிட்டு தலைமறைவான வேல்முருகன், காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இச்சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Chella

Next Post

கோவாவுக்கு சுற்றுலா சென்ற புதுச்சேரி மாணவன்..! அதிகளவு போதைப்பொருள் உட்கொண்டதால் மரணம்..!

Wed Aug 17 , 2022
கோவாவுக்கு சுற்றுலா சென்ற புதுச்சேரி மாணவன், அதிகளவு போதைப் பொருள் உட்கொண்டதால் பரிதாபமாக உயிரிழந்தார். புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், தனது நண்பர்களுடன் கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு சில நாட்களாக தனது நண்பர்களுடன் சேர்ந்து இரவு நேர விருந்துகளில் கலந்து கொள்வதை அந்த மாணவர் வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், நேற்றும் அவர் இரவு நேர விருந்தில் கலந்து கொண்டு அதிக அளவு போதை பொருள் உட்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், […]
கோவாவுக்கு சுற்றுலா சென்ற புதுச்சேரி மாணவன்..! அதிகளவு போதைப்பொருள் உட்கொண்டதால் மரணம்..!

You May Like