fbpx

யாருக்கெல்லாம் அகவிலைப்படி உயர்வு கிடைக்கும்..? தமிழக அரசு புதிய அறிவிப்பு..!

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

சுதந்திர தின விழாவில் பேசிய முதலமைச்சர் முக.ஸ்டாலின், “மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக, மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார். இதற்கிடையே, இந்த அகவிலைப்படி உயர்வு அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு சமையலர்கள், கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு பொருந்துமா என்ற கேள்வி எழுந்து வந்தது. இந்நிலையில், இதனை தெளிவுபடுத்தும் வகையில் தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

யாருக்கெல்லாம் அகவிலைப்படி உயர்வு கிடைக்கும்..? தமிழக அரசு புதிய அறிவிப்பு..!

அதில், ”கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் மாநில அரசு ஊழியர்கள்/ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 01.07.2022 முதல் அகவிலைப்படியை 31% இல் இருந்து 34% ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பின்படி, தலைமைச் செயலளாளர் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைத்து தமிழக அரசின் ஊழியர்களுக்கும் இந்த அகவிலைப்படி 01.07.2022 முதலே உயர்த்தி வழங்கப்படும். இதற்கான அரசாணைகள் விரைவில் தனித்தனியே வெளியிடப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

’முறைப்படியே அதிமுக பொதுக்குழு’..! ஐகோர்ட் தீர்ப்பால் பின்னடைவு இல்லை..! இபிஎஸ் ஆதரவாளர் கே.பி.முனுசாமி

Wed Aug 17 , 2022
”சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் எங்களுக்கு பின்னடைவு இல்லை” என்று எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பொதுக்குழு – செயற்குழு கூட்டம் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் நடத்திய பொதுக்குழுவை போலவே முறையாக நடத்தப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர்களும் 23 தீர்மானங்களை நிராகரித்தனர். பின்னர் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 100 பொதுக்குழு உறுப்பினர்களை கொண்டு ஓபிஎஸ் நீதிமன்றம் சென்றுள்ளார். உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. […]

You May Like