fbpx

லோகேஷின் ’தளபதி 67’ படத்தில் விஜய்க்கு வில்லனாகும் கௌதம் மேனன்..?

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் இணைய உள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் குறித்த செய்திகளும், அவரது படம் தொடர்பான செய்திகளும் பெரிய அளவில் பேசுபொருளாகி வருகிறது. இந்நிலையில், விஜயின் 67-வது படம் தொடர்பான மற்றொரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. தற்போது விஜய் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். வாரிசு படத்தைத் தொடர்ந்து விஜயின் 67-வது படம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தால் உருவாக உள்ளது. ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

லோகேஷின் ’தளபதி 67’ படத்தில் விஜய்க்கு வில்லனாகும் கௌதம் மேனன்..?

இந்த படத்திற்குப் பிறகு விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் இணைய உள்ள நிலையில், இந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருவதாகவும், இந்தாண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷாவும் வில்லனாக நடிக்க ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரித்விராஜ், இந்தி நடிகர் சஞ்சய் தத் மற்றும் இயக்குனர் கௌதம் மேனன் ஆகியோர் பேசப்பட்டு வருவதாகக் கூறப்பட்ட நிலையில், கௌதம் மேனனே தற்போது வில்லனாக நடிக்கப் போவதாகக் கோலிவுட் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

இனி ஏடிஎம் அல்லது வங்கிக்கு செல்ல தேவையில்லை.. இதை செய்தால் வீட்டிற்கே பணம் வரும்..

Wed Aug 17 , 2022
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.. அந்த வகையில் டோர்ஸ்டெப் பேங்கிங் (Doorstep Banking -DSB) என்ற சேவையை ஏற்கனவே எஸ்.பிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது.. நீங்கள் பணத்தை எடுக்க அல்லது டெபாசிட் செய்ய வங்கி அல்லது ஏடிஎம் மையத்திற்கு செல்ல வேண்டியதில்லை. ஒரு கால் செய்வதன் மூலம் உங்கள் வீட்டிற்கே வந்து பணம் கொடுக்கப்படும். எஸ்பிஐயின் இந்த […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!! சம்பள உயர்வு குறித்து வெளியான ஹேப்பி நியூஸ்..!!

You May Like