ஏடிஎம்களில் இனி 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து முக்கிய பொது மற்றும் தனியார் துறை வங்கிகளும் ஒவ்வொரு மாதமும் ஏடிஎம்களில் குறைந்த எண்ணிக்கையிலான இலவச பரிவர்த்தனைகளை அனுமதிக்கின்றன. நிதி மற்றும் நிதி அல்லாத சேவைகள் உட்பட பயனர் குறிப்பிட்ட வரம்பை மீறிய பிறகு, வங்கிகள் பொருந்தக்கூடிய வரிகளுடன் கூடுதல் கட்டணத்தை விதிக்கின்றன. மேலும், ஏடிஎம்களில் இலவச பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை கணக்கு வகை மற்றும் பயனர்கள் வைத்திருக்கும் டெபிட் கார்டைப் பொறுத்து மாறுபடும்.
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 2022 ஜனவரி 1-ம் தேதி முதல் அனைத்து வங்கிகளும் ஏடிஎம்மில் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 21 வசூலிக்கின்றன. மாதாந்திர இலவச பரிவர்த்தனை வரம்பை இந்த ஆண்டு தொடக்கத்தின் முதல் வசூலிக்கின்றன. இலவசப் பரிவர்த்தனை வரம்பை அடைந்த பிறகு, பயனர்கள் மேற்கொண்டு செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படும்.
வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் வங்கி ஏடிஎம்களில் ஐந்து இலவச பரிவர்த்தனைகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மெட்ரோ அல்லாத நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் மற்ற வங்கிகளின் ஏடிஎம்களில் ஐந்து இலவச பரிவர்த்தனைகளைப் பெறலாம்.