fbpx

இறுக்கி அணைத்து இடுப்பு எலும்பை உடைத்துவிட்டான்: கோர்ட் படியேறிய இளம்பெண்ணால் சுவாரசியம்..!

சீனாவில் உள்ள உகான் மாகாணத்தில் இயங்கிவரும் தனியார் நிறுவனத்தில் இளம்பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். கடந்த மே மாதம் அவர் தனது அலுவலக நண்பர்களுடன் கேண்டீனில் டீ குடித்துள்ளார். அப்போது அங்கு இளைஞர் ஒருவர் விளையாட்டாக அவரை திடீரென இறுக்கி அணைத்துள்ளார். அப்போது இளம்பெண்ணுக்கு அதிக வலி ஏற்பட்டுள்ளது. அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாத இளம்பெண் பணி முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

பின்னர் இரவில் விலா பகுதியில் வலி அதிகமாக இருந்துள்ளது. இதன் படுத்திருக்கிறார். மறுநாளும் வலி குறையாததால் விடுமுறை எடுத்து விட்டு வீட்டிலேயே ஓய்வு எடுத்துள்ளார். இதன் பின்னர் நேரம் ஆக ஆக வலி அதிகரித்ததால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்கேன் எடுத்துள்ளனர். அதில் இளம்பெண்ணின் மூன்று விலா எலும்புகள் உடைந்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அந்த இளம்பெண் சில மாதங்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்த நிலையில், சிகிச்சை முடிந்து இறுவனத்திற்கு திரும்பிய அந்த இளம்பெண், இறுக்கி அணைத்து தனது விலா எலும்புகளை உடைத்த இளைஞரிட தன்னுடைய மருத்துவ செலவுகளுக்கான பில்களை காட்டி பணம் கேட்டுள்ளார். அதற்கு அந்த இளைஞர், நான் இறுக்கி அணைத்ததால் தான் உனக்கு விலா எலும்புகள் உடைந்தன என்பதற்கு ஆதாரம் என்ன உள்ளது? என்று கூறி சிகிச்சைக்கான செலவை ஏற்க மறுத்து விட்டார்.

இதனைத் தொடர்ந்து இளம்பெண் கோர்ட்டை நாடியுள்ளார். அவரது மனுவை விசாரித்த நீதிபதிகள், சம்பவம் நடந்த பின்னர், இடைப்பட்ட காலத்தில் அந்தப் பெண் வேறு எங்கும் எலும்புகளை உடைத்துக்கொள்ளவில்லை என்பது ஊர்ஜிதமாகியுள்ளது. எனவே, இளம்பெண்ணை இறுக்கி அணைத்து அவர் எலும்புகள் உடைவதற்கு காரணமாக இருந்த இளைஞர் 10 ஆயிரம் யுவான் இழப்பீடாக அந்தப் பெண்ணுக்கு வழங்கவேண்டும்  என்று உத்தரவிட்டுள்ளனர்.

Rupa

Next Post

ஒரு தலைக்காதாலால் விபரீதம்: இளம் பெண்ணை காரை ஏற்றி கொன்ற கொடூர காதலன்..!

Fri Aug 19 , 2022
கர்நாடக மாநிலம், ஹாசன் டவுன், பொம்மநாயக்கனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் பரத். அரிசிகெரே பகுதியை சேர்ந்தவர் சரண்யா. இவர்கள் இருவரும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் பரத், சரண்யாவை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இதன் காரணமாக பரத் தன்னுடைய காதலை வெளிப்படுத்திய நிலையில், சரண்யா அவரது காதலை ஏற்று கொள்ள மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பரத், சரண்யாவை கொலை செய்ய திட்டமிட்டததாக கூறப்படுகிறது. […]
இதுக்கா இப்படியொரு தண்டனை...மகனுக்கு சூடு போட்டு; கண்ணில் மிளகாய் பொடியை தூவிய கொடூர தாய்...கேரளாவில் பயங்கரம்!

You May Like