fbpx

‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியுடன் நடிப்பவர்கள் இவர்கள்தான..! மாஸ் அப்டேட் கொடுத்த சன் பிக்சர்ஸ்..!

ரஜினிகாந்த் நடிக்கவுள்ள ஜெயிலர் படத்தின் யார் யார் நடிக்கவுள்ளனர் என்ற தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படம் ஜெயிலர். கடந்தாண்டு தீபாவளிக்கு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்த அண்ணாத்த படம் வெளியானது. இதேபோல், விஜய் நடித்த பீஸ்ட் படம் கடந்த ஏப்ரல் மாதம் ரிலீசாகியிருந்தது. இந்த படம் உருவாகிக் கொண்டிருக்கும் போதே ரஜினியும் நெல்சனும் இணையும் அடுத்தப்பட அறிவிப்பு வெளியானது. இதுதொடர்பாக மோஷன் போஸ்டரும் வெளியாகியிருந்தது. 

ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் நடிப்பவர்கள் இவர்கள்தான..! மாஸ் அப்டேட் கொடுத்த சன் பிக்சர்ஸ்..!

ஆனால், பீஸ்ட் படத்தின் தோல்வியால் நெல்சனுடன் இணைவதை ரஜினி கைவிட்டு விட்டார் என தகவல் வெளியானது. அதெல்லாம் இல்லை என அளவுக்கு படத்திற்கு “ஜெயிலர்” என பெயர் தேர்வு செய்யப்பட்டு முன்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஜெயிலர் படப்பிடிப்பு தொடங்கியதாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் ஜெயிலர் படத்தில் யார் யார் நடிக்கப்போகிறார்கள் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை ரம்யா கிருஷ்ணன் ரஜினியுடன் இணைந்து நடிக்கவுள்ளார். இதேபோல் தரமணி படத்தில் நடித்த வசந்த் ரவி, நடிகர் யோகிபாபு, மலையாள நடிகர் விநாயகன் ஆகியோர் இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Chella

Next Post

புது ரூல்ஸ்: இனி ஆசிரியர்களுக்கு இது கட்டாயம் இல்லை...! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..‌.!

Thu Aug 25 , 2022
ஆசிரியர்கள் பாட குறிப்பேடு பதிவேடுகளை மட்டும் பராமரித்தால் போதுமானது என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது; கல்வித்துறையில் பல்வேறு பதிவேடுகள் கணினி மயமாக்கப்பட்டு வருகின்றன. மேலும், தேவையில்லாத பதிவேடுகள் நீக்கப்படும். பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கையின்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்பின்படி, 81 பதிவேடுகளை மட்டும் இணையதளத்தில் பராமரித்தால் போதும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, இதுவரை ஆசிரியர்கள் பராமரித்து வந்த […]

You May Like