பொலிவியாவில் மரியா இனெஸ் பெரேடோ பாலியல் கல்வி ஆசிரியை ஒருவர் தற்போது பெற்றோரின் கோபத்திற்கு ஆளாகி உள்ளார்.. ஆம்.. தனது மாணவர்களிடம் விந்தணு நிரப்பப்பட்ட ஆணுறைகளை வகுப்பிற்கு கொண்டு வர கூறியுள்ளார்.. இந்த அருவருப்பான பணியால் மாணவர்களின் பெற்றோர்கள் மரியாவை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதனிடயே தனது செயலுக்காக மரியா மன்னிப்பு கோரியுள்ளார்.. மேலும் பேசிய அவர், “நான் நான்கு சிறிய குழந்தைகளைக் கொண்ட ஒரு குடும்பத்தின் தாய், நான் தவறான நபர் இல்லை.. ஈரமான இடத்தில் விந்தணுக்கள் எவ்வளவு காலம் உயிர்வாழும் என்பதைத் தீர்மானிப்பதற்காகவே விந்தணுக்களை ஆணுறைகளில் கொண்டு வர சொன்னேன்.. அதில் எந்த தவறான் எண்ணமும் இல்லை.. நான் யாரையும் கொல்லவில்லை, நான் யாரையும் பலாத்காரம் செய்யவில்லை. பாலியல் கல்வி வகுப்பில் அறிவை வழங்கியதற்காக சிறையில் அடைக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது.. ஆனால் பொலிவியாவின் ஒட்டுமொத்த சமுதாயத்திடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்..” என்று தெரிவித்தார்..
இதற்கிடையில், மரியா பாடம் நடத்திய பள்ளி மாணவர்கள் உளவியல் ரீதியாக மதிப்பீடு செய்யப்பட்டனர்.. அந்த விசாரணையின் போது மரியா தனது தற்போதைய பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை இயக்குநர் எட்வின் ஹுய்லானி தெரிவித்துள்ளார்.