fbpx

ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம் இருக்க, எழுதவே முடியாத பேனா சின்னம் எதற்கு?!: எடப்பாடியின் எகத்தாளம்..!

திருச்சியில் நடைபெற்ற அ.தி.மு.க கூட்டத்தில், தொண்டர்களுக்கு மத்தியில் எதிர்கட்சிதலைவரான எடப்பாடி பழனிசாமி உரயாற்றினார். முதலஅமைச்சராக இருந்த கருணாநிதிக்கு  நினைவு மண்டபம் கட்டுவதை நாங்கள் வேண்டாம் என்று கூறவில்லை, அப்படி கூறவும் மாட்டோம். தற்போது தமிழக அரசு பல்வேறு பணிகளை செயல்படுத்த போதிய நிதி இல்லாமல் தள்ளாடி வருகிறது.

போதுமான நிதி இல்லாத இந்த சூழ்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில்,  ரூ.80 கோடிக்கு எழுத முடியாத பேனா நினைவு சின்னம் அமைப்பது அவசியமா? என்பதை முதல்வர் அவர்கள் சிறிது யோசித்து பார்க்கவேண்டும். இதற்கு பதிலாக ரூ. 80 கோடிக்கு 6.5 கோடி தமிழக மக்களுக்கும் பேனா வாங்கி கொடுத்து விடலாம் என்பதையும் முதல்வர் அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று 15 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. என்ன செய்தீர்கள்? என்று மக்கள் கேட்கிறார்கள், நான் கேட்பது இருக்கட்டும், உங்களை தேர்தெடுத்த மக்கள் கேட்கிறார்களே என்ன பதி சொல்லப் போகிறீர்கள் முதல்வரே?. மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய எந்த திட்டத்தையும் நீங்கள் கொண்டுவரவில்லை. தேர்தலுக்கு முன்பு நீங்கள் அளித்த வாக்குறுதிகளயும் நிறைவேற்றவில்லை. அதனால் யாருக்கு என்ன பயன்?. சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு இவைதான் தி.மு.க ஆட்சியின் சாதனைகள். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Rupa

Next Post

”மகாராணிபோல் வாழ்ந்த சசிகலாவை அனாதையாக்கியவர் ஓபிஎஸ்தான்”..! ஆர்.பி.உதயகுமார்

Sun Aug 28 , 2022
”மகாராணிபோல் வாழ்ந்த சசிகலாவை சிறையில் தள்ளி அரசியல் அனாதை ஆக்கியவர் பன்னீர்செல்வம் தான்” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பன்னீர்செல்வம் அதிமுகவை தனது குடும்ப சொத்தாக்க முயற்சி செய்து வருகிறார். அது ஒருபோதும் எடுபடாது. சாதாரண ஓபிஎஸ், முதல்வர் பதவிக்கு தேவைப்படும் போதெல்லாம் பரிந்துரை செய்த டிடிவி தினகரனை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த ஓபிஎஸ், அவர் மீது அபாண்ட பழி சுமத்தினார். […]
”மகாராணிபோல் வாழ்ந்த சசிகலாவை அனாதையாக்கியவர் ஓபிஎஸ்தான்”..! ஆர்.பி.உதயகுமார்

You May Like