உலகின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 99.3 பில்லியன் டாலர் ஆகும்.. இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளிலும் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.. முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினருடன் மும்பையில் உள்ள பங்களாவில் வசித்து வந்தாலும், அவர் பல வெளிநாடுகளிலும் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்..
அந்த வகையில் தற்போது துபாயில் உள்ள பாம் ஜுமேரா தீவில் முகேஷ் அம்பானி மிகப்பெரிய பங்களாவை வாங்கி உள்ளார்.. தனது இளைய மகன் ஆனந்த் அம்பானிக்காக அவர் இந்த பங்களாவை வாங்கி உள்ளாராம். அதன் மதிப்பு சுமார் 90 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ.643 கோடி ஆகும்..
33,000 சதுர அடியில் கட்டுப்பாட்டுள்ள இந்த பங்களாவில் 10 படுக்கை அறைகள், 7 ஸ்பாக்கள், 2 நீச்சல் குளங்கள் உள்ளன.. கடற்கரை அருகே அமைந்துள்ள இந்த பங்களாவை ரிலையன்ஸ் குழுமத்தின் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று பராமரிக்கும் என்று கூறப்படுகிறது..
பனை மர வடிவில் செயற்கையாக உருவாக்கப்பட்ட பாம் ஜுமேரா தீவில் ஏற்கனவே பல பிரபலங்கள் வீடுகளை வாங்கி வருகின்றனர்.. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், பிரிட்டன் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் உள்ளிட்டோர் அங்கு வீடுகளை வாங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..