பூமிக்கு அருகில் விண்கற்கள் கடந்து செல்வது வழக்கமாக நடக்கும் நிகழ்வு தான்.. ஒரு விண்கல் அல்லது சிறு கோள் என்பது சூரிய குடும்பம் பிறக்கும்போது முழுமையாக உருவாகாத ஒரு சிறிய கிரகம். சூரியனை சுற்றி மில்லியன் கணக்கான சிறுகோள்கள் வலம் வருகின்றன. பெரும்பாலானவை செவ்வாய் மற்றும் வியாழனின் சுற்றுப்பாதைகளுக்கு இடையிலான ஒரு பகுதி முக்கிய சிறுகோள் இருந்தாலும், அவை ஒரே அளவிலும் வடிவத்திலும் இல்லை.. ஏனெனில் அவை சூரியனில் இருந்து வெவ்வேறு தூரங்களில் வெவ்வேறு இடங்களில் உருவாகின்றன. அவை வெவ்வேறு வகையான பாறைகளால் ஆனவை. அவை கிரகங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன.
அந்த வகையில் கடந்த ஆண்டு பல விண்கற்கள் பூமியை கடந்து சென்றதாக நாசா தகவல் வெளியிட்டது.. இந்த நிலையில் இந்த ஆண்டும் பல்வேறு விண்கற்கள் பூமியை நெருங்கி வருகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் 2022 QZ6 என பெயரிடப்பட்ட ஒரு பெரிய விண்கல், இன்று (ஆகஸ்ட் 31, 2022) பூமியை கடந்து பறக்க உள்ளதாக நாசா (NASA) தெரிவித்துள்ளது.. விமானத்தின் அளவை போன்ற சுமார் 110 அடி அகலம் கொண்ட இந்த விண்கல் மணிக்கு 42,768 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. பூமிக்கு அருகாமையில் இருப்பதால் இது “சாத்தியமான அபாயகரமான பொருள்கள்” வகையின் கீழ் வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. . 2022 QZ6 இன்று பூமியை கடந்த 12,60,000 கிலோமீட்டர் வேகத்தில் பறக்க உள்ளது..
1968 ஆம் ஆண்டு முதல் பூமிக்கு அருகில் சென்ற 1,000 சிறுகோள்களை நாசா கண்காணித்து வருகிறது. விண்வெளி தொலைநோக்கிகள் முதல் ரேடார் வரை அனைத்தையும் உள்ளடக்கிய சிறுகோள் பற்றிய விவரங்களை விண்வெளி நிறுவனம் கண்டறிய உதவுகிறது. நாசா, கடந்த ஆண்டு, DART (இரட்டை சிறுகோள் திருப்பிவிடுதல் சோதனை) திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் பூமிக்கு அருகில் உள்ள பொருட்களுக்கு எதிராக கிரக பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டது.
இதனிடையே 161989 Cacus 1978 CA என பெயரிடப்பட்ட மற்றொரு சிறுகோள், செப்டம்பர் 1 (நாளை) அன்று பூமியை கடக்க உள்ளது. 1.9 கிலோமீட்டர் அகலம் கொண்ட இந்த விண்கல், இதுவரை கண்டறியப்பட்ட அனைத்து சிறுகோள்களில் 99 சதவீதத்தை விட பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.