fbpx

கடந்த ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.43 லட்சம் கோடி..! மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு..!

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூ.1,43,612 கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் ரூ.7,060 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல், இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 19% அதிகரித்து ரூ.8,386 கோடியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு பிறகு பொருளாதாரம் தொடர்ந்து மீண்டெழுந்து வருகிறது. தொழில்துறை வளர்ச்சி மற்றும் வர்த்தக அளவும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஜிஎஸ்டி வரி வசூலும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.43 லட்சம் கோடி..! மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு..!

தொடர்ந்து 12-வது மாதமாக ஜிஎஸ்டி வரி வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூ 1,43,612 கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்தாண்டு ஆக்ஸ்ட் மாதத்தை விட இந்தாண்டு ஆகஸ்ட்டில் ஜிஎஸ்டி வசூல் 28% அதிகம் என மத்திய நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 2021 ஆகஸ்ட்டில் ரூ 7,060 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல் இந்த ஆண்டு ஆகஸ்டில் 19% அதிகரித்து ரூ8.386 கோடியானது”.

Chella

Next Post

கொரோனா இன்னும் முடியல.. வரும் மாதங்களில் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும்.. WHO வெளியிட்ட பகீர் தகவல்..

Thu Sep 1 , 2022
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்திருந்தாலும், அதன் பாதிப்பு இன்னும் முழுமையாக நீங்கிவிடவில்லை.. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு (WHO) கொரோனா தொற்று எதிர்வரும் மாதங்களில் தீவிரமடையும் என்று கூறியுள்ளது.. இதனால் கொரோனா இறப்பு எண்ணிக்கை மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.. செய்தியாளர்களிடம் பேசிய WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், “ உலகளவில் தற்போது கொரோனா இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.. வடக்கு அரைக்கோளத்தில் குளிர்ந்த […]
இந்தியாவில் புதிய வகை கொரோனா பாதிப்பு இல்லை..! மத்திய அரசு பரபரப்பு தகவல்..!

You May Like