fbpx

அதிர்ச்சி..!! குழந்தையை மீண்டும் வயிற்றுக்குள் வைத்து தைத்த மருத்துவர்..! பெரும் பரபரப்பு..!

7 மாத கர்ப்பிணி வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட குழந்தையை மீண்டும் வயிற்றுக்குள் வைத்து தைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம் கரீம்கஞ்ச் சிவில் மருத்துவமனையில் 7 மாத கர்ப்பிணி, பிரசவ வலியின் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மகப்பேறு மருத்துவர் டாக்டர் அஷிஷ்குமார் பிரசவம் பார்த்துள்ளார். அந்த பெண்ணுக்கு பிரசவத்திற்காக அறுவை சிகிச்சை செய்யும்போது 7 மாதங்களான கரு என்பதால் மிகச் சிறிய அளவில் இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர், மீண்டும் அந்த கருவை அப்பெண்ணின் வயிற்றுக்குள் வைத்து தைத்துள்ளார்.

அதிர்ச்சி..!! குழந்தையை மீண்டும் வயிற்றுக்குள் வைத்து தைத்த மருத்துவர்..! பெரும் பரபரப்பு..!

பின்னர், புதன்கிழமை அந்த பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து, அதே மருத்துவமனையில் மீண்டும் அவர் அனுமதிக்கப்பட்டார். அப்போதுதான் முழு கதையும் வெளிச்சத்திற்கு வந்தது. இதைத்தொடர்ந்து மருத்துவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி அவரது குடும்பத்தினர் அப்பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chella

Next Post

திரையரங்க பார்க்கிங் கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய வேண்டும்.. தமிழக அரசு உயர்நீதிமன்றம் உத்தரவு..

Thu Sep 1 , 2022
திரையரங்க பார்க்கிங் கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள திரையரங்குகளில் வாகனங்கள் நிறுத்துவதற்கான கட்டணத்தை கடந்த 2017-ம் ஆண்டு மாற்றி அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.. ஆனால் இந்த கட்டணம் குறைவாக இருப்பதாக சென்னை ராயபுரத்தில் உள்ள உட்லேண்ட்ஸ் திரையரங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.. திரையரங்குகளில் வாகன நிறுவத்துற்கான கட்டணம் குறைவாக உள்ளதாவும், […]
இனியும் சும்மா இருக்க மாட்டோம்..! கொந்தளித்த தமிழக அரசு..! கடைகள் மீது பாயும் அதிரடி நடவடிக்கை..!

You May Like