fbpx

இந்தியா-பாகிஸ்தான் மீண்டும் பலப்பரீட்சை..! இன்று அனல் பறக்கும் ஆட்டம்..!

ஆசிய கோப்பை டி20 தொடரின் ‘சூப்பர் 4’ சுற்று ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.

துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் ‘சூப்பர் 4’ சுற்று ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மீண்டும் பலப்பரீட்சையில் இறங்குகின்றன. லீக் சுற்றில் இந்திய அணி பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. தற்போது, இரண்டாவது முறையாக மோதுவதால் ரசிகர்கள் மத்தியில் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் மீண்டும் பலப்பரீட்சை..! இன்று அனல் பறக்கும் ஆட்டம்..!

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, கே.எல். ராகுல் இருவரும் இன்றைய போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹாங்காங் அணிக்கு எதிராக 26 பந்துகளில் 68 ரன்கள் விளாசிய சூர்யகுமார் யாதவிடமிருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக மாறியிருக்கிறார். இன்றைய போட்டியிலும் அவர் தனது திறமையை நிரூபிப்பார். காயம் காரணமாக விலகிய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள அக்‌ஷர் பட்டேல் இன்றைய ஆட்டத்தில் களம் இறங்குவார் என்று கூறப்படுகிறது. புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சு அணிக்கு கைகொடுக்கும்.

இந்தியா-பாகிஸ்தான் மீண்டும் பலப்பரீட்சை..! இன்று அனல் பறக்கும் ஆட்டம்..!

பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாம், முகமது ரிஸ்வான், பாக்கா் ஸமான், குஷ்தில் ஷா ஆகியோா் அற்புதமாக பேட்டிங் செய்து வருகின்றனா். லீக் சுற்றில் இந்தியாவிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் வீரர்கள் வரிந்துகட்டுவார்கள். அதேசமயம் பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து 2-வது வெற்றியை ருசிக்கும் முனைப்புடன் இந்தியா இன்று களமிறங்குகிறது. எனவே, இந்த ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

Chella

Next Post

டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து ஜடேஜா விலகல்? பிசிசிஐ அதிர்ச்சி தகவல்..! ரசிகர்கள் கவலை..!

Sun Sep 4 , 2022
ரவீந்திர ஜடேஜாவுக்கு காயம் தீவிரமானதாக இருப்பதால் அவரால் ஐசிசி உலகக் கோப்பை டி20 தொடரிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இதில், ஆல்-ரவுன்டர் ரவீந்திர ஜடேஜாவின் ஆட்டம் கவனம் ஈர்த்தது. குறிப்பாக, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஜடேஜாவின் ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு கைகொடுத்தது. அதைத் தொடர்ந்து ஹாங்காங் அணியுடனான போட்டியிலும் அணியின் வெற்றிக்கு பக்கபலமாக திகழ்ந்தார். […]
டி20 உலகக்கோப்பை..! இந்திய அணியில் இடம்பெறாத அதிரடி வீரர்..! மீண்டும் பின்னடைவா?

You May Like