fbpx

17 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி உல்லாசம்..! ஆட்டோவில் பிறந்த குழந்தை..! பரபரப்பு சம்பவம்..!

17 வயது சிறுமி குழந்தை பிரசவித்த சம்பவம் தொடர்பாக பட்டதாரி இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு‌ செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்தாண்டு 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு கடந்த 5 மாதங்களாக வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு நேற்று வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது தாயாரிடம் தெரிவிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக ஆட்டோ மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சிறுமிக்கு ஆட்டோவிலேயே பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, அந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தாயும்-சேயும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறுமிக்கு 17 வயதே ஆகிறது என்பதை அறிந்த மருத்துவர்கள் இதுகுறித்து காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

17 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி உல்லாசம்..! ஆட்டோவில் பிறந்த குழந்தை..! பரபரப்பு சம்பவம்..!

பின்னர், அங்கு விரைந்த போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமிக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த இளைஞருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமியிடம் அந்த இளைஞர் திருமணம் செய்துக்கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இதையடுத்து, அந்த இளைஞரை பிடிக்க அவரது வீட்டிற்கு போலீசார் சென்றபோது, அவர் தற்கொலைக்கு முயற்சித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக இளைஞரின் தாயார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chella

Next Post

காருக்கு வழிவிடாமல் இருசக்கர வாகனத்தில் சென்றதால் வெறிச்செயல்….பெண்ணை தாக்கிய அ.தி.மு.க முன்னாள் .நிர்வாகி கைது  …

Sun Sep 4 , 2022
காருக்கு வழிவிடாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணைத் தாக்கி மானபங்கம் செய்ய முயற்சித்ததாக சேலம் அருகே அ.தி.மு.க. முன்னாள்நிர்வாகி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகரத்தில் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் முன்னாள் செயலாளராக இருந்தவர் இளங்கோ (33). இவர் முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை வீடு புகுந்து தாக்கியுள்ளார். அதோடு மட்டுமின்றி  அவரை , மானபங்கம் செய்ய […]
28 ஆண்டுகளாக

You May Like