ஜார்கண்டில் நடந்த நம்பிக்கை தீர்மானத்தில் ஹேமந்த் 48 ஆதரவு வாக்குகள் பெற்று முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொண்டார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் முக்திமோர்ச்சா மற்றும் காங்கிரஸ் மற்றும் ஜனதா தள கட்சியின் ஐ.மு. கூட்டணியில் ஆட்சி நடந்து வருகின்றது. முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தனது பதவியை தவறாக பயன்படுத்தி சுரங்க குத்தகையை எடுத்ததாக பா.ஜ.வினர் குற்றம் சாட்டினர். எனவே அவர் பதவி விலக வேண்டும் என்று கூறினர். இது பற்றி தேர்தல் ஆணையமும் பதவியில் இருந்து நீக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்தனர். எம்.எல்.ஏ. பதவி இல்லை என்றாலும் முதல்வர் பதவியில் அவர் நீடிக்க வேண்டியது இருக்கும். எனவே அரசியலில் பெரும் குழப்பமும் பதற்றமும் நீடித்தது.
இதனிடையே பா.ஜ.வினர் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கிவிட்டதாக குற்றம்சாட்டினார். மற்ற மாநிலங்களில் பா.ஜ.க. செய்தது போல் ஜார்கண்ட் மாநிலத்திலும் தனது வேலையை காட்டுவதாக குற்றசம் சாட்டினார். எனவே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கூறினார். இது தொடர்பான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டசபையில் இன்று நடத்தப்பட்டது.
ஜார்கண்ட் சட்டமன்றத்தில் உள்ள 81 உறுப்பினர்களில் ஹேமந்த் கட்சியில் 30 உறுப்பினர்களும் , காங்கிரஸில் 18 பேரும் ராஷ்டிரிய ஜனதா தளத்தில் ஒருவரும் என 49 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். பாஜவில் 26 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 48 எம்.எல்.ஏ.ககள் ஹேமந்த் சோரனுக்கு ஆதரவாக அளித்தனர். பெரும்பான்மை வாக்குகள் பெற்றதால் தொடர்ந்து அவர் பதவியை தக்க வைத்துக் கொண்டார்.
பா.ஜ. வலையில் எம்.எல்.ஏக்கள் சிக்கவில்லை.
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேரம் பேசக்கூடும் என்பதால் அதுவரை அவரது கட்சி உறுப்பினர்களை சண்டிகரில் உள்ள சொகுசு விடுதியில் தங்கவைத்து பின்னர் விமானம் மூலம் சட்டமன்றம் அழைத்து வந்துள்ளார்.