டெல்லியில் நடைபெற்ற நல்லாசிரியர் விருது விழாவில் தமிழகத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
ஆசிரியர்கள் தினத்தை ஒட்டி தேசிய நல்லாசிரியர் விருது ஒவ்வொரு ஆண்டும் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான இந்த நாளில் நல்லாசிரியர் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது.
இதில் மொத்தம் 46 பேருக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து வழங்கப்பட்டது. தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் கீழாம்பல் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
தமிழகத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் பள்ளி சீருடையில் சென்று நல்லாசிரியர் விருதை பெற்றுக் கொண்டார். இதே போல புதுச்சேரியைச் சேர்ந்த அரவிந்த் ராஜா என்ற ஆசிரியருக்கும் விருது கிடைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து ராமச்சந்திரன் கூறுகையில் ’’ ஆசிரியர்கள் பாகுபாடு பார்க்காமல் பணியாற்ற வேண்டும். என் பள்ளி , என் பாடம் , என்று இல்லாமல் அனைத்து பள்ளியும் நமது பள்ளியே என நினைத்து அனைத்து பள்ளிகளிலும் கல்வி நிலையை உயர்த்த போராட வேண்டும். ஆசிரியர்கள் பொறுப்புடன் இரக்க வேண்டும். மாணவர்களின் முன்னேற்றத்தை கருத்தில் வைத்து செயல்பட வேண்டும். என்றார்.