உலகின் முதல் உள்ளிழுக்கும் கோவிட் தடுப்பூசி சீனா அவசரகால ஒப்புதல் வழங்கி உள்ளது.
சீனாவின் தேசிய மருத்துவப் பொருட்கள் நிர்வாகம் CanSino’s Ad5-nCoV நாசிவழி பூஸ்டர் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.. கொரோனா தடுப்பூசியின் ஊசி இல்லாத, சுவாசிக்கும் தடுப்பூசி பதிப்பை அங்கீகரித்த முதல் நாடாக சீனா மாறியுள்ளது என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது. Tianjin-ஐ தளமாகக் கொண்ட CanSino Biologics என்ற நிறுவனம், ஊசி இல்லாத கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது.. அதாவது ஊசி செலுத்திக் கொள்ள தேவையில்லை.. இந்த தடுப்பு மருந்தை சுவாசித்தாலே போதும்..

இந்த தடுப்பு மருந்தின் பரிசோதனைக்கு கடந்த ஆண்டு மார்ச் அனுமதி வழங்கப்பட்டது.. இந்த தடுப்பு மருந்து தீவிர பக்க விளைவுகள் இல்லாமல் நோயெதிர்ப்பு மறுமொழிகளைத் தூண்டியது என்று ஆரம்ப கட்ட மருத்துவ சோதனை முடிவுகள் காட்டுகிறது. 28 நாட்கள் இடைவெளியில் கொடுக்கப்பட்ட இந்த தடுப்பூசியின் இரண்டு உள்ளிழுக்கப்பட்ட டோஸ்கள், மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு நடத்தப்பட்ட ஆராய்ச்சியின்படி, ஒரு ஊசியின் அதே அளவிலான நடுநிலையான ஆன்டிபாடிகளை வெளிப்படுத்தியது.
சோதனைகளின் போது, பல பங்கேற்பாளர்கள் தடுப்பூசியின் ஊசி பதிப்பைப் பெற்றனர், அதைத் தொடர்ந்து 28 நாட்களுக்குப் பிறகு உள்ளிழுக்கும் பூஸ்டர் டோஸை பெற்றனர். அவர்களுக்கு நடுநிலையான ஆன்டிபாடிகள் உருவானது.. மேலும் இது கொரோனா அறிகுறிகளைத் தடுப்பதில் 66% பயனுள்ளதாகவும், கடுமையான நோய்க்கு எதிராக 91% பயனுள்ளதாகவும் இருப்பது கண்டறியப்பட்டது.