நாடு முழுவதும் இன்று இளநிலை நீட் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகாது என தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள இளநிலை மருத்துவப் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு ஜூலை மாதம் 17ஆம் தேதி 497 நகரங்களில் 3570 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வினை 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 தேர்வர்கள் எழுதி இருந்தனர். முதல்முறையாக இந்தியாவிற்கு வெளியில் 14 மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.
தேர்வர்கள் http://neet.nta.nic.in என்ற இணையதள முகவரியில் தேர்வு முடிவுகளை காலை முதல் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்வு முடிவுகள் வெளியாகும் நேரத்தில் தற்பொழுது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மாலையில் முடிவுகள் வெளியிடப்படும். மாணவர்கள் neet.nta.nic.in இணையதளத்தில் இன்று மாலை முடிவுகள் வெளியிடப்பட உள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.