fbpx

அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்த மத்திய அரசு.. உடனடியாக அமலுக்கு வரும் எனவும் அறிவிப்பு..

இந்தியாவில் இருந்து உடைந்த அரிசி ஏற்றுமதி செய்ய தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது..

இந்தியா 150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அரிசியை ஏற்றுமதி செய்கிறது.. ஏற்கனவே வறட்சி, வெப்ப அலை மற்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஆகியவற்றின் காரணமாக உணவு விலை அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் இருந்து உடைந்த அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.. இந்த தடை இன்று முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.. இதன் மூலம் உணவு விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது..

இதனிடையே பல்வேறு வகை அரிசி ஏற்றுமதிக்கு 20% ஏற்றுமதி வரி விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.. இன்று முதல் அமலுக்கு வரும் ஏற்றுமதி வரியில் இருந்து புழுங்கல் மற்றும் பாசுமதி அரிசிக்கு அரசு விலக்கு அளித்துள்ளது. இந்தியாவின் ஏற்றுமதியில் 60%க்கும் அதிகமான பங்கு வகிக்கும் வெள்ளை மற்றும் பழுப்பு அரிசியை இந்த வரி பாதிக்கும் என்று அகில இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.வி.கிருஷ்ணாராவ் கூறினார். இந்த வரியால், இந்திய அரிசி ஏற்றுமதி உலக சந்தையில் போட்டியின்றி மாறும். தாய்லாந்து மற்றும் வியட்நாம் முக்கிய அரிசி சந்தையாக மாறும்..” என்றும் அவர் தெரிவித்தார்..

உலக அரிசி ஏற்றுமதியில் 40% க்கும் அதிகமான பங்கை இந்தியா கொண்டுள்ளது.. அந்த வகையில் உலக சந்தையில் தாய்லாந்து, வியட்நாம், பாகிஸ்தான் மற்றும் மியான்மர் ஆகியவற்றுடன் இந்தியா போட்டியிடுகிறது. நெல் உற்பத்தி செய்யும் முக்கிய மாநிலங்களான மேற்கு வங்கம், பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் சராசரிக்கும் குறைவான மழைப்பொழிவு இந்தியாவின் அரிசி உற்பத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி சாதனை 21.5 மில்லியன் டன் என்ற அளவை தொட்டது, இது உலகின் அடுத்த நான்கு பெரிய தானிய ஏற்றுமதியாளர்களான தாய்லாந்து, வியட்நாம், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றின் மொத்த ஏற்றுமதியை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

வரலாற்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா..! சாம்பியன் பட்டம் வென்று புதிய சாதனை..!

Fri Sep 9 , 2022
டயமண்ட் லீக் மீட் தொடரில் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் ஒலிம்பிக் நாயகர் நீரஜ் சோப்ரா. அண்மையில் சுவிட்சர்லாந்து நாட்டின் லுசானேவில் நடைபெற்ற டயமண்ட் லீக் போட்டியில் இந்திய அணியின் நீரஜ் சோப்ரா முதலிடம் பிடித்து, இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றார். அதோடு 2023 உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்வதற்கும் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றார். அந்தவகையில், சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில் நடைபெற்ற டயமண்ட் […]
வரலாற்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா..! சாம்பியன் பட்டம் வென்று புதிய சாதனை..!

You May Like