fbpx

தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.37,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது..

இந்நிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைவதும் பின்னர் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது… சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.4735 விற்பனை செய்யப்படுகிறது… இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.37,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளியின் விலை 80 காசு உயர்ந்து ரூ.60.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.60,300-க்கு விற்பனையாகிறது..

Maha

Next Post

சூர்யாவுடன் இணையும் பா.ரஞ்சித்..! 'German' படத்தின் கதை இதுதானாம்..! வெளியான மாஸ் அப்டேட்..!

Fri Sep 9 , 2022
எதிர்காலத்தில் நடக்க இருக்கும் கதை, சூர்யாவிடம் அந்த கதையைச் சொல்லிவிட்டேன், கதையில் சில மாற்றங்கள் செய்ய இருப்பதாக பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கிய ’நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அதே நேரத்தில் பல்வேறு தரப்பட்ட மக்களின் பாராட்டுகளையும் பெற்றுவருகிறது. அப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பா. ரஞ்சித் சியான் விக்ரம் 61-வது திரைப்படத்தை இயக்கவுள்ளார். பொன்னியின் செல்வன் படத்தைத் தொடர்ந்து, விக்ரம் நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத […]
சூர்யாவுடன் இணையும் பா.ரஞ்சித்..! German படத்தின் கதை இதுதானாம்..! வெளியான மாஸ் அப்டேட்..!

You May Like