நாகை அருகே கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 4 மீனவர்களை மற்றொரு விசைப்படகில் வந்தவர்கள் காப்பாற்றினர். …
நாகை மாவட்டம் கீச்சங்குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் ஞானபிரகாசம் , ராஜகுமார் , செண்பகம் , மனோ. இவர்கள் விசைப்படகு ஒன்றில் நாகை அருகே மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது திடீரென விசைப்படகில் ஓட்டை ஏற்பட்டு தண்ணீர் விசைப்படகிற்குள் சென்றது.
அதிர்ச்சியடைந்த மீனவர்கள் ஓட்டையை அடைக்க முயன்றனர் . ஆனால் முடியவில்லை தண்ணீர் விசைப்படகிற்குள் புகுந்து படகு கவிழ்ந்தது . தண்ணீரில் விழுந்த 4 மீனவர்களும் தத்தளித்துக்கொண்டிருந்தனர். அப்போது மற்றொரு விசைப்படகில் சில மீனவர்கள் வந்துள்ளனர். தண்ணீரில் தத்தளித்தவர்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் தண்ணீரில் குதித்து மீனவர்கள் நான்கு பேரையும் காப்பாற்றி கரையில் சேர்த்தனர்.