fbpx

மின்சாரம் தேவையில்லை.. சூரிய ஒளியால் சார்ஜ் செய்யப்படும் முதல் எலக்ட்ரிக் கார்.. விரைவில் அறிமுகம்..

அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை, அதிகரித்து வரும் மாசுபாடு, ஆகியவை காரணமாக அதிகமான மக்கள் மின்சார கார்களை வாங்க விரும்புகின்றனர்.. இதன் காரணமாக மின்சார கார் உற்பத்தி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பல புதிய வசதிகளுடன் கூடிய கார்களை அறிமுகம் செய்து வருகின்றனர்.. அந்த வகையில், ஜெர்மனியை சேர்ந்த சோனோ மோட்டார்ஸ் நிறுவனம் சூரிய ஒளியில் சார்ஜ் செய்யும் மின்சாரக் காரை அறிமுகம் செய்ய உள்ளது.. இந்த கார் மக்கள் மத்தியில் இடம்பிடிக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சோனோ சியான் என்பது உலகின் முதல் சோலார் சார்ஜ் செய்யப்பட்ட மின்சார கார் ஆகும், இந்த காரின் உற்பத்தி விரைவில் தொடங்கும் என்று நிறுவனம் கூறுகிறது. 2,000 யூரோக்கள் (சுமார் 1.5 லட்சம் இந்திய ரூபாய்) செலுத்தி இந்த காரை ஏற்கனவே 20,000க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காரின் உற்பத்தியாளரான சோனோ மோட்டார்ஸ், இந்த காரின் விலையை 25,126 யூரோ (சுமார் 20 லட்சம் இந்திய ரூபாய்) என வைத்துள்ளது. மலிவு விலையில் கார் கிடைக்கச் செய்வதோடு, முதல் சோலார் எலக்ட்ரிக் கார் என்ற பட்டத்தையும் இந்நிறுவனம் பெறும் என்று நிறுவனம் கூறுகிறது.

சோனோ மோட்டார்ஸ் ஜூலை 2023க்குப் பிறகு இந்தக் காரின் உற்பத்தியைத் தொடங்கலாம். ஃபின்லாந்தில் உள்ள வால்மெட் ஆட்டோமோட்டிவ் தொழிற்சாலையில் இந்த கார்கள் தயாரிக்கப்பட உள்ளது.. 7 ஆண்டுகளில் 2.5 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய சோனோ மோட்டார்ஸ் இலக்கு வைத்துள்ளது. சோனோ சியோன் காரில் 456 சோலார் செல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ஒருமுறை சார்ஜ் செய்தால் 112 கிமீ தூரத்தை கடக்க முடியும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சோனோ சியோன் காரில் 54kwh இன் சக்திவாய்ந்த பேட்டரி அமைப்பை நிறுவனம் வழங்கியுள்ளது, இது காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 305 கிமீ தூரத்தை கடக்கும், அதே நேரத்தில் இந்த பேட்டரியின் சார்ஜிங் திறன் 75kwh ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Maha

Next Post

விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியில்  20 பேர் பலி …மகாராஷ்டிரா போலீஸ் அதிர்ச்சி அறிக்கை

Sat Sep 10 , 2022
மகாராஷ்டிராவில் நடைபெற்ற விநாயகர்  சிலை கரைப்பு நிகழ்ச்சியில் நேற்று ஒரு நாளில் பல்வேறு இடங்களில் 20 பேர் பலியானதாக காவல்துறை அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. மஹாராஷ்டிராவில் 10-வது நாளான நேற்று விநாயகர் சிலை கரைக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்வேறு இடங்களில் பல்வேறு விபத்துக்கள் நடந்துள்ளன. கடந்த 31ம் தேதி முதல்  தொடங்கிய விநாயகர் சதுர்த்தி நேற்றுடன் 10 நாட்கள் நிறைவடைந்தது. இதையடுத்து விநாயகர் சிலைகளை லாரி, டிராக்டர்களின் […]

You May Like