கல்கத்தாவில் மொபைல் கேமிங் செயலிக்கு எதிராக அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக ரூ.7 கோடிசிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மொபைல் கேமிங் செயலியின் விளம்பரதாரர்களுக்கு எதிரான இந்த விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனை 6 இடங்களில் நடத்தப்பட்டது. ’’இ நக்கட்ஸ் ’’ என்ற மொபைல் கேமிங் செயலியின் விளம்பரதாரர் ஆமீர் கானுக்கு சொந்தமான 6 இடங்களில் திடீரென ரெய்டு நடந்தது.
இது தொடர்பாக பெடரல் ஏஜென்சி கூறுகையில் , ’’ அமலாக்கத்துறையினர் சட்டம் 2002ன் படி சோதனை நடத்தியதில் மொபைல் கேமிங் செயலி மோசடியில் ரூ.7 கோடி பறிமுதல் செய்துள்ளது. ’’
கல்கத்தா காவல்துறையில் முதல் தகவல் அறிக்கையில் கடந்த ஆண்டு இந்நிறுவனத்திற்கு எதிராக மற்றும் கேமிங் விளம்பரதாரர்களுக்கு எதிராக புகார் உள்ளது. இதன் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்து. இதன் ஆபரேட்டர்களிடம் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள செயலிகளுடன் இதற்கு தொடர்பு உள்ளதா எனவும் விசாரணை நடைபெற்று வருகின்றது. பொதுமக்களை ஏமாற்றும் நோக்கத்தில் இந்த மொபைல் கேமிங் செயலியை ஆமீர்கான் என்பவர் உருவாக்கியதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.