சென்னையில் அகரம் பவுண்டேசன் தொடங்கி 43 ஆண்டுகள் ஆவதை ஒட்டி நடிகர் கார்த்தி ஆண்டுவிழாவில் கலந்து கொண்டு சிறுவர்களிடையே போதைப்பழக்கம் ஏற்பட்டிருப்பது பற்றி பேசினார்.
சிவக்குமார் கல்வி அறக்கட்டளை மற்றும் அகரம் பவுண்டேசனின் 43வது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்கள், மாணவிகளுக்கு சிறப்பு பரிசும் , சான்றிதழும் வழங்கப்பட்டது. அப்போது மாணவர்கள் முன்னிலையில் அவர் பேசுகையில் , ’’எங்களுக்கு எங்கள் தந்தை நல்ல சிந்தனையை ஊட்டி வளர்த்துள்ளார். அது மகிழ்ச்சியை அளிக்கின்றது. உடல் உறுப்பு தானம் பற்றிய தயக்கம் என்னுள் இருந்தது. அதையும் இங்கு ஒரு மாணவர் பேச்சில் அதை உடைத்துவிட்டர் நம் வாழ்க்கைக்கு தேவையான சிந்தனையை ஏற்படுத்துகின்றது.
இன்றைய நடைமுறையில் மதிப்பெண்தான் அனைத்தையும் நிர்ணயிக்கின்றது. ஏ.சி. அறையில் அமர்ந்து படித்து 100மதிப்பெண் வாங்குவது பெரியதல்ல, வெளிச்சம் இல்லாத ஒரு மாணவனட 50 மதிப்பெண் வாங்கினால் கூட அது பாராட்டுக்குரியது. என கூறினார் இந்நிகழ்ச்சியி் மாணவர்களுககு ரூ.4 கோடிக்கான உதவித் தொகையை ஏழை எளிய மக்களுக்கு வழங்கினார்கள்.
![](https://1newsnation.com/wp-content/uploads/2022/09/Karthistudio.jpg)
மேலும் , ’’ ஜாதி பிரச்சனை இன்று வரை கிராமங்களில் உள்ளது. பள்ளிகளிலேயே போதைப் பழக்கம் ஒரு பிரச்சனையாக உள்ளது. அது எப்படிப்பட்டது , என்ன பெயர் என்பது கூட தெரிவதில்லை. என வேதனை தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து நடிகர் சிவக்குமார் பேசுகையில் … கல்வி ஒழுக்கம் இவை இரண்டும் உலகத்தில் உச்சம் தொட வைக்கும். அப்துல்காலாம் அவர்கள் இதற்கு உதாரணம் . முதலில் மாணவர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்றார்..