மறைந்த ராணி எலிசபெத் எழுதிய ரகசிய கடிதம் தற்போது வைரலாகி வருகின்றது. ஆனால் அதை 63 ஆண்டுகளுக்கு பிரிக்கமுடியாது. ஏன் பிரித்து படிக்க முடியாது என்பதுபற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் கூறப்பட்டுள்ளது.
ராணி 2-ம் எலிசபெத் 1986ல் நவம்பரில் ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு சென்றிருக்கின்றார். அப்போது சிட்னியின் மேயருக்கு ராணி தன் கையால் ஒரு கடிதம் எழுதினார். அதன் தொடக உரையிலேயே கி.பி.2085ம் ஆண்டு உங்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பொருத்தமான நாளில் இந்த உரையை பிரித்து குடிமக்களுக்கு இந்த செய்தியை அறிவிக்க வேண்டும்’’ . என கூறப்பட்டுள்ளது.
ராணி அதில்என்னதான் எழுதியுள்ளார் என்பதை அறிந்துகொள்ள 2085ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும். ஆஸ்திரேலியாவில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க ராணி விக்டோரியா கட்டிடத்தில் இந்த கடிதம் பூட்டப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு எப்போது அதை எடுத்து படித்து காட்ட வேண்டும் என்பதையும் அதிகாரிகள் அதில் குறிப்பிட்டுள்ளார்கள்.