fbpx

’சறுக்கும் ஓபிஎஸ்… சர்கஸ் காட்டும் ஈபிஎஸ்’..! அதிமுக அலுவலக வழக்கில் அதிரடி காட்டிய சுப்ரீம் கோர்ட்..!

அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைப்பது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உயர்நீதிமன்றத்தின் ஆணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தபோது, அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதனால், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல்வைக்கப்பட்டது. இதை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தொடர்ந்து செயல்படலாம் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

’சறுக்கும் ஓபிஎஸ்... சர்கஸ் காட்டும் ஈபிஎஸ்’..! அதிமுக அலுவலக வழக்கில் அதிரடி காட்டிய சுப்ரீம் கோர்ட்..!

இந்த மேல்முறையீடு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் சார்பில் ஒரு வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதால் மட்டுமே அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஏற்றே தமிழ்நாடு அரசு செயல்பட்டது. எனவே, ஓபிஎஸ் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதேபோல், எடப்பாடி பழனிசாமி சார்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. அவர் திட்டமிட்டு வன்முறையை நிகழ்த்தி, அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்த ஓபிஎஸ், ஆவணங்களை எடுத்துச் சென்றுவிட்டார் என தெரிவிக்கப்பட்டது. 

’சறுக்கும் ஓபிஎஸ்... சர்கஸ் காட்டும் ஈபிஎஸ்’..! அதிமுக அலுவலக வழக்கில் அதிரடி காட்டிய சுப்ரீம் கோர்ட்..!

இதையடுத்து, உச்சநீதிமன்ற நீதிபதிகள், ”ஒரு அரசியல் கட்சியின் அலுவலகத்தை முடக்கினால் எப்படி அந்த அரசியல் கட்சி இயங்கும். ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகள் சுதந்திரமாக இயங்க வேண்டும். இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செல்லும். எனவே, ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீடு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறோம்” என தெரிவித்தனர். 

Chella

Next Post

ஞானவாபி மசூதியில் வழிபாடு கோரிய வழக்கு… விசாரணைக்கு ஏற்றது மாவட்ட நீதிமன்றம்…

Mon Sep 12 , 2022
வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் உள்ள இந்துக் கோயிலில் வழிபாடு நடத்த அனுமதிக்கக் கோரிய மனுவை மாவட்டநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. வாரணாசியில் ஞானவாபி மசூதி உள்ளது. இதில் வெளிப்புற சுவரில் உள்ள இந்துக் கடவுள் சிலைகளை வழிபட அனுமதி கோரி 5 பெண்கள் மனு தாக்கல் செய்தனர். மசூதிக்குள் ஆய்வு நடத்தப்பட்டு இது பற்றி விசாரிக்க நீதிமன்றம் குழு அமைத்திருந்தது. அப்போது மசூதியின் நுழைவாயில் அமைந்துள்ள நீர் தேக்கும் தொட்டியில் சிவலிங்கம் […]

You May Like