fbpx

அபார சதத்தால் தரவரிசைப் பட்டியலில் முன்னேறிய விராட் கோலி..! எந்த இடம் தெரியுமா?

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் முடிவடைந்ததை அடுத்து, ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது.

ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அபார சதம் விளாசிய விராட் கோலி, மீண்டும் ஃபார்ம்-க்கு திரும்பியுள்ளார். கோலியின் இந்த சதத்தால், தரவரிசைப் பட்டியலில் 14 இடங்கள் முன்னேறியுள்ளார். தற்போது ஐசிசி டி20 தரவரிசையில் விராட் கோலி 15-வது இடத்தை பிடித்துள்ளார். அதே நேரத்தில் ரோகித் சர்மா 14-வது இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் 15 இடங்களுக்குள் 3 இந்தியர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.

அபார சதத்தால் தரவரிசைப் பட்டியலில் முன்னேறிய விராட் கோலி..! எந்த இடம் தெரியுமா?

ஆசிய கோப்பையைத் தொடர்ந்து, விராட் கோலி டி20 தரவரிசையில் 33-வது இடத்தில் இருந்து 15-வது இடத்திற்கு முன்னேறியுள்ளதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள பேட்ஸ்மேன்கள் அபாரமான மீட்சியை பெற்றுள்ள கோலியிடம் இருந்து மீண்டும் ஒரு சவாலை எதிர்கொண்டுள்ளனர். தரவரிசைப் பட்டியலில் 792 புள்ளிகளுடன் முகமது ரிஸ்வான் முதலிடத்தை தக்க வைத்துள்ளார். இரண்டாவது இடத்தில் தென்னாப்பிரிக்க வீரர் ஆடம் மார்க்ரம் இருக்கிறார். அதேபோல், மூன்றாவது இடத்தில் பாபர் அசாம், நான்காவது இடத்தில் சூர்யகுமார் யாதவ், ஐந்தாம் இடத்தில் டேவிட் மலான் இருக்கிறார்.

Chella

Next Post

விதிகளை மாற்ற இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அனுமதி … பி.சி.சி.ஐ.க்கு அனுமதி அளித்தது உச்சநீதிமன்றம் …

Wed Sep 14 , 2022
இந்திய கிரிக்கெட் வாரியத்தில் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரின் பதவிக்காலம் நீட்டிப்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இந்தியகிரிக்கெட் வாரிய தலைவர் சவ்ரவ் கங்குலி , செயலாளர் ஜெய்ஷா ஆகியோரின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கு பி.சி.சி.ஐ.-ல் இதுவரை விதிமுறைகள் இல்லை. எனவே இவர்களின் பதவிக்காலம் நீட்டிப்புக்கு பி.சி.சி.ஐக்கு அனுமதி தேவை எனவே இது தொடர்பாக இந்த  விவகாரத்தில்  விதிகளை திருத்த பி.சி.சி.ஐக்கு அதிகாரம் வேண்டும் எனவே  அனுமதி கேட்டு […]

You May Like