fbpx

வெளியானது ‘நானே வருவேன்’ படத்தின் டீசர்..!! தெறிக்கவிடும் BGM..!!

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ”நானே வருவேன்” படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷின் ”நானே வருவேன்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். மேலும், அவரது சகோதரரும் திரைப்பட இயக்குநருமான செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வருவதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இப்படத்தின் மூலம் பாலிவுட் நடிகை எல்லி அவ்ராமும் தமிழில் அறிமுகமாகிறார். இப்படத்தை வி கிரியேஷன் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தனுஷின் முந்தைய படமான திருச்சிற்றம்பலம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல லாபம் ஈட்டி வரும் நிலையில், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. மேலும், இந்தப் படத்தின் மூலம் தனுஷ் தனது சகோதரர் செல்வராகவனுடன் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைகிறார் என்பதாலும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் செல்வராகவனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு இருவரும் துள்ளுவதோ இளமை, கண்டு கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்கள் இவர்கள் கூட்டணியில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், தற்போது ”நானே வருவேன்” படம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது.

இந்நிலையில், படத்தின் முதல் சிங்கிள் பாடலாக ‘வீரா சூரா’ பாடல் யுவனின் குரலில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ள நிலையில், ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Chella

Next Post

நடிகைக்கு முத்தமிட்ட ஜெனிலியா கணவர்…. வைரலாகும் வீடியோ…

Thu Sep 15 , 2022
ஜெனிலியாவின் கணவர் ரித்தேஷ் தேஷ்முக் நடிகை பிரீத்தி ஜந்தாவுக்கு முத்தமிடும் காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. தமிழில் பாய்ஸ் படத்தில் அறிமுகமாக முன்னணி கதாநாயகர்களுடன் நிறைய படங்கள் நடித்துள்ளார் ஜெனிலியா,…. இவர் தெலுங்கு படங்களில் படுபிசியாக இருந்த ஜெனிலியா நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில் ரிதேஷ் தேஷ்முக் ஜெனியாவுடன் பங்கேற்றார். அப்போது நடிகை பிரீத்தி ஜிந்தாவிடம் […]

You May Like