fbpx

சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா … மாஸ்க் கட்டாயம் அணியவேண்டும் – சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல் ..

சென்னையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் , விழாக்காலங்களில் ஏராளமானோர் மார்க்கெட் பகுதி , துணிக்கடை , நகைக்கடை என கூட்டம் கூடுகின்றனர். இதனால் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு வழிகளில் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. சிறப்பு தடுப்பூசி முகாம்களும் நடத்தப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. இதுவரை 1,10,34,921 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. 6 லட்சம் பேர் வரை பூஸ்டர் தடுப்பூசி போட்டுள்ளது.

Next Post

தங்கப்புதையல் கிடைத்ததாக ரூ.10 லட்சம் மோசடி...

Thu Sep 15 , 2022
தங்கப்புதையல் கிடைத்துள்ளதாக கூறிய நபர் குறைந்த விலையில் தருவதாக மளிகை கடை உரிமையாளரை 10 லட்சம் ரூபாய் ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.. கோவை கருமத்தம்பட்டி அருகே வாகராயம்பாளையத்தைச் சேர்ந்தவர் சதாசிவம் இவர் மளிகை கடை நடத்துகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒருவர் அறிமுகமானார். அவர் தான் கட்டிட வேலை செய்வதாக கூறி சதாசிவத்தின் மளிகை கடையில் அரிசி , பருப்பு போன்ற பொருட்கள் வாங்கிச் சென்றுள்ளார். இந்நிலையில் […]

You May Like