ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், சிறுத்தை சிவா என அடுத்தடுத்து இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடத்தி வருகிறார்… மீண்டும் இணைந்து பணிபுரியலாம் என்று ரஜினி ஒரு சில இயக்குனர்களிடம் கூறியிருக்கிறாராம்.. அந்த வகையில் கபாலி, காலா படத்தை தொடர்ந்து மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ளதாக கூறப்பட்டது..
![](https://1newsnation.com/wp-content/uploads/2021/12/Rajinikanth-1-1-1024x569.jpg)
இதனிடையே கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை பார்த்த ரஜினி, அப்படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை நேரில் அழைத்து பாராட்டினார்.. இதையடுத்து இவர்கள் இருவரும் இணைவார்கள் என்று கூறப்பட்டது.. ஆனால் ரஜினி நெல்சனுக்கு வாய்ப்பு கொடுத்து விட்டார்.
இதனிடையே ரஜினியுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற காத்திருந்தவர்களில் கார்த்திக் சுப்புராஜும் ஒருவர்.. பீட்சா படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானார்.. இதை தொடர்ந்து அவர் இயக்கிய ஜிகர்தண்டா படம் நல்ல வரவேற்பை பெற்றது.. இந்த படத்தை பார்த்து விட்டு தான் ரஜினி கார்த்திக்கு வாய்ப்பு கொடுத்தார்.
அந்த வகையில் ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு பேட்ட படம் வெளியானது. இந்த படத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா, சிம்ரன், சமுத்திரக்கனி நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், மீண்டும் படம் பண்ணுவோம் என்று கார்த்திக் சுப்புராஜிடம் ரஜினி கூறினாராம்.. எனினும் 3 ஆண்டுகள் ஆகியும் ரஜினியிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை.
ரஜினிக்காக காத்திருந்த கார்த்திக் சுப்புராஜ், தற்போது தன்னுடைய முதல் ஹிட் படமான ஜிகர்தண்டாவின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகளை தொடங்கிவிட்டாராம்.. 2014 ஆம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா இந்த படத்தில் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..