செல்வா இயக்கத்தில் 1993-ம் ஆண்டு வெளியான படம் அமராவதி. இப்படம் பாக்ஸ் அபீஸில் நல்ல வசூலை பெற்றது.. இன்றைக்கு தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக இருக்கும் அஜித் அமராவதி படத்தின் மூலம் அறிமுகமானார்.. நடிகை சங்கவிக்கும் இது தான் முதல் படம்.. பின்னர் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய முன்னணி நடிகையாக சங்கவி வலம் வர தொடங்கினார்.. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்..
அந்த வகையில் நடிகர் விஜய்யின் ரசிகன் படத்தின் மூலம் பிரபலமானார்.. இதையடுத்து மீண்டும் விஜய் உடன் இணைந்து தேவா, கோயம்புத்தூர் மாப்பிள்ளை, விஷ்ணு என படங்களில் ஜோடி சேர்ந்தார்.. அப்போது விஜய்யும், சங்கவியும் காதலித்ததாக தகவல் பரவியது..
இதையடுத்து பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார் சங்கவி. 1993 முதல் 2004 வரை தனது கெரியரில் ஆக்டிவாக இருந்த சங்கவி, 80-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.. பின்னர் 2016-ல் பெங்களூருவை சேர்ந்த வெங்கடேஷ் என்ற சாப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்து கொண்டார்.. இந்த தம்பதிக்கு 2020-ம் ஆண்டில் ஒரு பெண் குழந்தை பிறந்தது..
இந்நிலையில் கணவர் மற்றும் குழந்தையுடன் சங்கவி இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.. அதை பார்த்த பலரும் நடிகை சங்கவியா என்று ஆச்சரியத்துடன் கருத்து பதிவிட்டு வருகின்றனர்..