‘பொன்னியின் செல்வன் பாகம் 2′ இன்னும் 6 அல்லது 9 மாதங்களுக்குள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் பாகம் 1 செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தற்போது படக்குழுவினர் புரொமோஷன் பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பொன்னியின் செல்வன் பாகம் 2 குறித்த தகவல் வெளியாகி உள்ளது. முதல் பாகம் வெளியான பிறகு 6 அல்லது 9 மாதங்களுக்கு பிறகு இரண்டாம் பாகம் வெளியாகும் என இயக்குனர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.
![சூப்பர் அப்டேட்..!! 'பொன்னியின் செல்வன் பாகம் 2' எப்போது ரிலீஸ் தெரியுமா?](https://1newsnation.com/wp-content/uploads/2022/08/ponniyin-selvan.jpg)
மணிரத்னத்தின் கனவுப் படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். இப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரம் குறித்த அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டிருந்தது. இதில், ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, சுந்தர சோழனாக பிரகாஷ்ராஜ், வந்தியத்தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், ஐஸ்வர்யா லட்சுமி பூங்குழலியாகவும், ஷோபிதா வானதியாகவும், சரத்குமார் பெரிய பழுவேட்டரையராகவும் மற்றும் பார்த்திபன் சின்னப் பழுவேட்டரையராகவும் நடித்திருக்கின்றனர்.
![சூப்பர் அப்டேட்..!! 'பொன்னியின் செல்வன் பாகம் 2' எப்போது ரிலீஸ் தெரியுமா?](https://1newsnation.com/wp-content/uploads/2022/09/Mani-Ratnam.jpg)
தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை, லைகா புரொடெக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் டீசர், ட்ரெய்லர், பாடல்கள் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில், இந்தப் படத்தின் 2ஆம் பாகம் வெளியாகும் என்ற அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.