fbpx

தொழிலதிபர் வீட்டில் 95 சவரன் நகை கொள்ளை … 45 கிலோ வெள்ளி , ரூ.1.10 லட்சம் ரொக்கமும் மாயம்…

மதுரை தொழிலதிபரின் வீட்டில் 95 சவரன் நகை மற்றும் 45 கிலோ வெள்ளிப் பொருட்களை கொள்ளையர்கள் திருடிச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மேலூர் குமரன் நகரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் பாலகிருஷ்ணன் . இவர் வீட்டிலில்லாத போது ஜன்னலை உடைத்து உள்ளே வந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்து 95 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றனர். மேலும் 45 கிலோ வெள்ளியையும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தையும் கொள்ளையடித்தனர்.

வெளியூர் சென்றிருந்த பாலகிருஷ்ணன் இன்று வீட்டிற்கு திரும்பியபோது பீரோ உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் நகைகள் கொள்ளைபோனது தெரியவந்தது. இது குறித்த மேலூர் காவல்துறைக்கு புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலகிருஷ்ணன் வீட்டில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகைகளையும் ஆய்வு செய்து கொள்ளையில் ஈடுபட்டவர்கள் யார் எனகண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு  வருகின்றனர்.

Next Post

மியான்மர் இந்தியர்களை மீட்க நடவடிக்கை …. புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தகவல் ….

Sun Sep 18 , 2022
மியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் மற்றும் இந்தியர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மியான்மரில் ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம் நாட்டை கைப்பற்றியதைத் தொடர்ந்து அங்கு மக்கள் வதைக்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகின்றன. இந்நிலையில் அங்கு ஏராளமான இந்தியர்களும் வதைக்கப்படுவதாக மியான்மரில் வசிக்கும் இந்தியர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. […]

You May Like