fbpx

 காஃபிக்கு பதில் இந்த பழத்தை சாப்பிட்டு அந்த நாளை தொடங்குங்கள் …. ஏன் காஃபி வேண்டாம் ? இதோ சில காரணங்கள்! ….

பெரும்பாலான மக்கள் காலையில் எழுந்தவுடன் காஃபி குடித்த பின்பே மற்ற வேலைகளை தொடங்குவார்கள். மற்ற ஆரோக்கியமான விஷயங்களில் யாரும் கவனம் செலுத்துவதில்லை இதுதான் நிதர்சமான உண்மை…

காலையில் தினமும் காஃபி பருகும் போது ’கேஃபைன் ’ என்ற காபியில் உள்ள மூலக்கூறு உங்களை எழுப்பிவிட்டு உங்கள் இதயத்தை சுறுசுறுப்பாக்கி , ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை அதிகரித்து , உடலை சூடாக்கி மூளையை செயல்படவைக்கின்றது.

’கேஃபைன் ’ என்ற மூலக்கூறில் சில நேர்மறையான விளைவுகளும் உள்ளன அதில் மறுப்பதற்கு ஒன்றும் இல்லை. அதே சமயம் இதில் சில பின்னடைவுகளும் உள்ளது . இதோ என்ன என்னனு தெரிஞ்சுக்கங்க …

  • கேஃபைன் என்ற மூலக்கூறு உங்கள் உணவுக்குழலில் அமிலத்தன்மையை அதிகரிக்கச்செய்கின்றது ..
  • அதிக மன பயத்தை தூண்டி விடுகின்றது. …
  • உடலில் உள்ள தாதுப்பொருட்களை வெளியேற்றுகின்றது…
  • சிறுநீரக பாதிப்பை தூண்டி விடுகின்றது.. ஓய்வின்மை மற்றும் அடிமையாக்குகின்றது…

நீங்கள் காஃபிக்கு பதிலாக ஆரோக்கியமான ஆப்பிளை சாப்பிடுவதால் என்னென்ன பயன் ?

ஆப்பிள் உலகிலேயே மிகவும் பிரபலமான பழங்களில் ஒன்று. இதில் அனைத்துவித சத்துக்களும் அடங்கியுள்ளது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்து , விட்டமின் இ, ரெட்டினோல் , விட்டமின் சி , கேட்டசின் , குளோரோஜெனிக் அமிலம் , பீட்டா கெரோட்டின் போன்றவை இதில் நிறைந்து உள்ளது.

தினமும் ஆப்பிள் சாப்பிடுவதன் மூலம் கேன்சர் செல் வளர்ச்சியை தடுக்கின்றது. மிகக் குறைந்த கொழுப்பு அளவை உடலில் சேர்ப்பதால் எடை குறைவதற்கு அற்புதமான பழம். தினமும் ஆப்பிள் சாப்பிடுவதன் மூலம் நுரையீரல் பாதிப்பு சீராகி நன்றாய இயங்கச் செய்கின்றது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்து உங்கள் உடல் ஆரோக்கியத்தை சீராக வைக்க உதவுவதோடு உங்கள் மன ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றது.

ஆப்பிளில் உள்ள பைட்டோ வேதிப்பொருட்களால் நாள்பட்ட நோய்களைக்கூட தடுக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.இவற்றை எவ்வாறு காஃபியுடன் ஒப்பிட்டு உங்களை எச்சரிக்கையாக வைத்திருப்பது.? ….

ஏன் காஃபிக்கு பதில் ஆப்பிள் ?

ஆப்பிளில் ’’கேஃபைன்’’ என்ற வேதிமூலக்கூறு கிடையாது. இது உடல் சோர்வில் இருந்து நம்மை சுறுசுறுப்பாக்குகின்றது. முன்பு கூறப்பட்டது போலவே கேபைனும் அதைத்தான் செய்கின்றது இது நரம்பு மண்டலத்தை ஊக்குவித்து சுறுசுறுப்பை அதிகரிக்கின்றது. இது உள்ளார்ந்த ஆற்றல் பண்புகளை விட ஆப்பிள் அதன் ஆற்றல்வாய்ந்த விளைவுகளுக்கு பொறுப்பாகும். அதாவது விளைவுகள் நன்மையையே செய்யும்.

ஆப்பிளில் உள்ள ஃப்ரக்டோஸ் எனப்படும் இயற்கையான சர்க்கரை அதிக சத்துக்களையும் பயனுள்ள ஆற்றலையும் தருகின்றது. பழத்தின் சர்க்கரை உடனடி ஆற்றலை உடலுக்குள் அனுப்பி நம்மை சுறுசுறுப்பாக இருக்க உதவுகின்றது. காபியை போன்றல்லாமல் ஆப்பிளை சாப்பிட்டால் சோர்வாக உணரமுடியாது. காபியைக் காட்டிலும் ஆற்றலை தக்க வைக்கின்றது. நார்ச்சத்து அடங்கிய ஆப்பிள் மணிக்கணக்கில் சாப்பிட்ட திருப்தியை அளிக்கின்றது. ஒரு கப் காஃபியை விட பைட்டோ வேதிப் பொருட்கள் , விட்டமின் , தாதுக்கள்  அடங்கிய ஒரு ஆப்பிள் அந்த நாளை இனிதே ஆரோக்கியமாக தொடங்குவதுடன் எடையை குறைக்க உதவுகின்றது. அடுத்த நாள் உங்கள் ஆற்றலை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்த வேண்டுமானால் நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள் நீங்கள் எதை சாப்பிட வேண்டும்.?

Next Post

பெரும் சோகம்... பிரபல நடிகை உடல் நலக்குறைவால் தனது 50 வயதில் காலமானார்...! அதிர்ச்சியில் திரையுலகம்.‌‌...

Mon Sep 19 , 2022
பிரபல தொலைக்காட்சி நடிகை, நிஷி சிங் தனது 50 வயதில் காலமானார் பிரபல தொலைக்காட்சி நடிகை, நிஷி சிங் தனது 50 வயதில் காலமானார். உடல்நலக் குறைவால் அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் பிறந்தநாள் முடிந்த இரண்டு நாட்களில் காலமானார். நடிகை உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், நேற்று மாலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். குபூல் ஹை நடிகர், அவரது கணவர் சஞ்சய் […]

You May Like