காரைக்குடி அருகே மாமனாருடன் ஏற்பட்ட தகராறில் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு மருமகன் தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோவிலூரைச் சேர்ந்தவர் நாகப்பன் (55). இவரது மகள் ராக்கம்மாளுக்கும் அதே ஊரைச் சேர்ந்த சின்ன கருப்பு என்பவரின் மகன் ராமச்சந்திரன் என்பவருக்கும் திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கின்றார்கள்.
இந்நிலையில் மகள் ராக்கம்மாளை பார்க்க நாகப்பன் வந்திருந்தார். அப்போது நாகப்பன் – ராமச்சந்திரன் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தன் வீட்டில் வைத்திருந்த குருவி சுடும் துப்பாக்கியை எடுத்து மாமனாரை சுட்டுவிட்டு தப்பி ஓடினான்.
பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் காரைக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கியால் சுட்ட ராமச்சந்திரன் தப்பி ஓடிய நிலையில் குன்றக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.