சண்டிகர் பல்கலைக்கழகத்தில் வீடியோ வெளியானதாக பரபரப்பு அடங்குவதற்குள் அதே போல் சம்பவம் மும்பை ஐ.ஐ.டியில் நடந்துள்ளதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
மும்பை ஐ.ஐ.டி.யில் பொறியியல் படிக்கும் மாணவி ஒருவர் இந்த புகாரை தெரிவித்துள்ளார். யாரோ ஒருவர் ஜன்னல் வழியாகவும் சில நேரங்களில் குளியல் அறையிலும் கேமராவை மறைத்து வைத்து வீடியோ எடுப்பதாக அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் அளித்த புகாரில் ’’ மாணவிகளின் தனிப்பட்ட பகுதிகளில் கேமரா வைக்கப்பட்டு வீடியோ பதிவு செய்ப்பட்டுள்ளது. விடுதியில் கேன்டீனில் வேலை செய்யும் பணியாள்தான் இதை செய்திருக்கின்றார். இதை நாங்கள் கையும் களவுமாக பிடித்துள்ளோம். இவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ’’ என புகாரில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகார் குறித்து காவல்துறையினர் ஐ.ஐ.டி. சென்று விசாரணை நடத்தினர். அங்குள்ள கல்லூரியின் தலைவரும் இதை ஒப்புக்கொண்டார். எனவே போலீசார் இதுதொடர்பான விசாரணைக்காக அந்த நபரை கைது செய்து காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.
மேலும் அந்த வீடியோடிவை அவன் வேறு செல்பேசிகளுக்கு ஷேர் செய்யவில்லை. மாணவர்களின் பாதுகாப்பை கல்வி நிறுவனம் உறுதிசெய்கின்றது. நாங்கள் மாணவர்களுக்கு துணையாக நிற்கின்றோம். பாதுகாப்பையும் எங்களால் முடிந்த அளவுக்கு வழங்கி இருக்கின்றோம். மேலும் ஆண் கேன்டீன் பணியாளரை நீக்கிவிட்டு புதிய பெண் பணியாளர் நியமிக்க ஆணையிடப்பட்டுள்ளது. எனவே அதுவரை கேன்டீன் செயல்படாது எனவும் கூறினர்.
சண்டிகர் பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் மற்ற மாணவிகளை வீடியோ எடுத்து வெளியிட்டதாக பெரும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் ஐ.ஐ.டி. மும்பையில் நடந்துள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.