fbpx

இனி அனைத்து கார்களிலும் இது கட்டாயம்.. விரைவில் புதிய வாகன பாதுகாப்பு விதிகள் அறிமுகம்..

சாலை பாதுகாப்புக்கான புதிய விதிமுறைகளை அமல்படுத்த உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது..

இந்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. அந்த அறிக்கையில் “ வாகன உற்பத்தியாளர்கள் பின் இருக்கை சீட் பெல்ட்களின் பயன்பாட்டை உறுதிசெய்ய அலாரம் அமைப்பை நிறுவ வேண்டும். ​வாகனத்தில் பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் சீட் பெல்ட் அவசியம். சீட் பெல்ட் அணியவில்லை என்றால், ஆடியோ-விஷுவல் எச்சரிக்கை இயக்கப்பட வேண்டும். எம் மற்றும் என் பிரிவுகளின் வாகனங்களில், சீட் பெல்ட் அலாரம் இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எம்1 வகை வாகனங்களில் சைல்டு லாக் அனுமதிக்கப்பட மாட்டாது..” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வாகன பாதுகாப்புக்காக கடுமையான சட்டங்களை இயற்ற அரசாங்கம் தயாராக இருப்பதால் இந்த புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் புதிய வாகனங்களில் கூடுதல் பாதுகாப்பு அமைப்புகளை இணைக்க உரிய கால அவகாசம் வழங்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..

அரசாங்கம் என்னென்ன புதிய விதிகளை கொண்டு வர உள்ளது..?

  • காரின் எஞ்சின் தொடங்கும் போது வீடியோ எச்சரிக்கை.
  • பெல்ட் இல்லாமல் வாகனம் ஓட்டும்போது ஆடியோ வீடியோ அலாரம் ஒலிக்கும்.
  • பயணத்தின் போது யாராவது பெல்ட்டை கழற்றினால் அலாரம் தொடர்ந்து ஒலிக்கும்.
  • சீட் பெல்ட்டை குறைந்தபட்சம் 10 மிமீ இருப்பது கட்டாயமாகும்
  • ரிவர்ஸ் அலாரம் கட்டாயமாக இருக்கும்

Maha

Next Post

TNHRCE-யில் வேலை – தமிழ் எழுத படிக்கத் தெரிந்தால் போதும் …

Wed Sep 21 , 2022
தமிழ் எழுத மற்றும் படிக்கத் தெரிந்தவர்களுக்கான வேலை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் அறிவிக்கப்பட்டுள்ளது. சுவாமி நாத சுவாமி கோவில் இளநிலை உதவியாளர் , உதவி மின்வாரியர் , உதவி பிரசாரகம் , ஸ்தானிகம் பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து புதியஅறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு மொத்தம் 6 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தேவையான தகுதிகள் பற்றிய முழுவிவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள தகுதிவாய்ந்தவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் 15.10.2022க்குள் விண்ணிப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. […]

You May Like