குஜராத்தில் தேர்தல் வருவதை அடுத்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஆம்ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தபபடும் என தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவையின் பதவிக்காலம் டிசம்பர் மாதத்துடன் நிறைவடைகின்றது. எனவே அதற்கு முன்பாக மாநிலத் தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்த உள்ளது. பா.ஜ.க. –காங்கிரஸ் இடையே இருமுனைப் போட்டி நிலவி வந்த நிலையில் இந்த முறை ஆம் ஆத்மி கட்சி சேர்ந்துள்ளது. குஜராத்தில் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் பல்வேறு அசத்தாலான வாக்குறுதியை எல்லாம் கொடுத்து வருகின்றது.
குஜராத்தின் வதோதராவில் உள்ள டவுன் ஹாலில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது மக்கள் பிரச்சனைகள் பற்றி பேசினார். பல்வேறு திட்டங்கள் பற்றியில் அவர் கட்சியினர் முன்பு தெரிவித்தார்.
அப்போது பத்திரிகையளர் சந்திப்பின் போது அவர் பேசுகையில் , ’’அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி உள்ளனர். அவர்களின் முக்கிய கோரிக்கையே பழைய ஓய்வூதியத்திட்டத்தை செயல்படுத்துவதுதான். நான் அவர்கள் அனைவருக்கும் ஒரு உத்தரவாதம் அளிக்கின்றேன். குஜராத்தில் ஆம் ஆத்மி கடசி ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத்தையே அமல்படுத்துவோம். ’’ என கூறினார்.
பஞ்சாபின் முதலமைச்சர் பகவந்த் மான் , பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்துவது பற்றி ஏற்கனவே தெரிவித்துள்ளார். அதைப் போலவே குஜராத்தில் ஆம் ஆத்மி ஆடசிக்கு வந்தால் கண்டிப்பாக இந்த திட்டத்தை நிறைவேற்றுவோம். தொடர்ந்து அரசு ஊழியர்களாகிய நீங்கள் போராடுங்கள் என்றார். தற்போது உள்ள பா.ஜ.க. அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவில்லை என்றால், நாங்கள் ஆட்சி அமைத்து இரண்டு மாதத்தில் இதை நிறைவேற்றிக் காட்டுவோம்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை குஜராத்தில் ஆட்சிக்கு வந்தால் , பழைய பென்சன் திட்டத்தை கொண்டு வருவதாக கூறி உள்ளார். இதில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள் அரசு ஊழியர்கள் எவ்வளவு பெரிய பங்கு வகிக்கின்றீர்கள் என்று… பாஜகவை ஆட்சியில் இருந்து விரட்டி ஆம்ஆத்மியை பதவியில் அமர்த்துஙகள். 27 ஆண்டுகள் பா.ஜ.க ஆட்சியில் இருந்துள்ளது. ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தது. அரசு ஊழியர்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணுவோம். என தெரிவித்தார். அரசு ஊழியர்களை ஆம் ஆத்மிக்கு வரும் தேர்தலில் வெற்றி பெற ஆதரவளிக்க தூண்டுவதாக சில கருத்துக்கள் நிலவுகின்றது என பத்திரிகையாளர் கேள்விக்கு பதில் அளித்த அரவிந்த் கெஜ்ரிவால்…’’ நான் ஓய்வு பெற்ற அதிகாரிகளிடம் ஒன்று கேட்டுக்கொள்கின்றேன். இந்த வனக்காவலர்கள், முன்னாள் ராணுவத்தினர். சுகாதாரப் பணியாளர்கள் இவர்கள் அனைவருமே நாட்டின் குடிமக்கள். இவர்களுக்கும் ஜனநாயக உரிமை உள்ளது. ஆட்சியில்மாற்றம் வேண்டும் நினைக்கின்றீர்கள் என்றால் நீங்கள் ஏன் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தக்கோரி கடிதம் எழுதக்கூடாது’’ என்றார்