fbpx

’மாஸ் காட்டும் அஜித்’..! ’துணிவு’ படத்தின் இரண்டாம் போஸ்டர் வெளியீடு..!

’துணிவு’ படக்குழு சர்பிரைஸாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நிலையில், தற்போது இரண்டாம் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களுக்குப் பிறகு ஹெச்.வினோத் மற்றும் அஜித் 3-வது முறையாக இணையும் இந்த படத்திற்குத் தற்காலிகமாக ’ஏகே 61’ என்று பெயரிடப்பட்டுப் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது. 70% படப்பிடிப்பு முடிந்த நிலையிலும் படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் வராத நிலையில், நேற்று இந்த படத்தின் முதல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. ’துணிவு’ எனப் பெயரிடப்பட்ட இப்படத்தின் போஸ்டரில் துப்பாக்கியுடன் அஜித் இடம்பெறும் ஸ்டைலான புகைப்படமும் No Guts No Glory என்ற வாசகமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

துணிவு படத்தில் அஜித்துடன் மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் வீரா, சமுத்திரக்கனி, ஜான் கொக்கன் மற்றும் தெலுங்கு நடிகர் அஜய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். போனி காபூர்ஸ் பேவியூ ப்ராஜெக்ட்ஸ் LLP மற்றும் Zee Studios இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவும், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்கின்றனர். ஹெச்.வினோத் இயக்கத்தில் 2017ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு இசையமைத்த ஜிப்ரான் துணிவு படத்திற்கு இசையமைக்கிறார்.

வரும் 2023 குடியரசு தினத்தை முன்னிட்டு இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு துவங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. சுமார் 25 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்த ஷெட்யூலில் சில முக்கிய அதிரடி காட்சிகளைப் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும், இப்படத்தின் இரண்டாவது போஸ்டர் தற்போது வெளியாகி, ரசிகர்களுக்கு மீண்டும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

Chella

Next Post

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கொட்டித் தீர்க்கும் மழை..!! எங்கெங்கு தெரியுமா..?

Thu Sep 22 , 2022
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக செப்டம்பர் 22, 23ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான, மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், 24 முதல் […]

You May Like