fbpx

நாடு முழுவதும் அதிரடி ரெய்டு..!! அவசர ஆலோசனையில் அமித்ஷா..!! அடுத்து நடக்கப்போவது என்ன?

நாடு முழுவதும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முக்கிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழகம், கேரளா உட்பட இந்தியா முழுவதும் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. சோதனை நடத்தி வருகிறது. எஸ்.டி.பி.ஐ. கட்சி அலுவலகங்கள், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்கள் இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. தமிழத்தில், கோவை, தேனி, ராமநாதபுரம், தென்காசி என பல இடங்களில் சோதனை நடைபெற்று பல்வேறு முக்கிய அதிகாரிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். நாடு முழுவதும், எஸ்.டி.பி.ஐ. கட்சி மற்றும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் அதிரடி ரெய்டு..!! அவசர ஆலோசனையில் அமித்ஷா..!! அடுத்து நடக்கப்போவது என்ன?

இந்த சோதனை நடவடிக்கை நேற்று இரவு முதல் தொடங்கி இன்னும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் உள்ள உள்துறை அலுவலகத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உள்துறை செயல்துறை அதிகாரிகள், என்.ஐ.ஏ. அதிகாரிகள் உடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.

Chella

Next Post

அடுத்த மாதம் 21 நாட்கள் வங்கிகள் இயங்காது.. விடுமுறை தினங்களின் முழு பட்டியல் இதோ..

Thu Sep 22 , 2022
அக்டோபர் மாதத்திற்கான வங்கி விடுமுறை குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.. அக்டோபர் மாதத்திற்கான வங்கி விடுமுறைகளின் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ளது… அக்டோபர் மாதம் விடுமுறை காலம் தொடங்குவதால், இந்த மாதத்தில் 21 வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் அடங்கும். பிராந்திய விடுமுறைகள் அந்தந்த மாநில அரசாங்கங்களால் தீர்மானிக்கப்படுகின்றன. எனவே, வாடிக்கையாளர்கள் தங்கள் கிளைகளுக்குச் செல்வதற்கு முன் விடுமுறைப் […]

You May Like